பிரதமர், கருணாநிதி வரவேற்பு-பாஜக அதிருப்தி
சென்னை:மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம்தரும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பட்ஜெட் குறித்து கருத்து கேட்டபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். முதல்வர் கருணாநிதியும்பட்ஜெட்டைப் பாராட்டியுள்ளார். மக்கள் நல்வாழ்வை மனதில் வைத்து தீட்டப்பட்ட பட்ஜெட்டை நிதியமைச்சர்ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2007-08ம் ஆண்டுக்கான பட்ஜெட் விவசாயிகள், நடுத்தரத் தட்டு மக்களைமுன்வைத்துத் தீட்டப்பட்டுள்ளது.
50 லட்சம் விவசாயிகளுக்கு புதிய பயிர்க் கடன் வழங்குவதற்காக 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயைவங்கிகள் மூலம் வழங்கப் போவதாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
இதேபோல ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை மேலும் 300 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த 12ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது.
கல்விக்காக 34 சதவீத அதிக ஒதுக்கீடு செய்துள்ளதும், பள்ளிக் கல்விக்கு ரூ. 23,142 கோடியும், மேல் நிலைக்கல்விக்கு ரூ. 3074 கோடியும் வழங்கியுள்ளது மாணவர்களின் படிப்பை இடை நிறுத்தலைக் குறைக்கும் ஒருஉத்தியாகும்.
ஒரு லட்சம் ஊனமுற்றோருக்கு வேலையை, தனியார் நிறுவனங்கள் மூலம் அரசு மானியத்துடன் அளிக்கும்திட்டமும் வரவேற்புக்குரியதாகும்.
தமிழக்தைப் பொருத்தவரையில், கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 50 கோடி நிதி வழங்கப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதியமைச்சரை பாராட்டுகிறேன். இந்த நிதி நிலை அறிக்கை மக்களின்நல்வாழ்வை மையமாக வைத்து தீட்டப்பட்ட பட்ஜெட்டாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பியுமான ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில்,பணவீக்கத்தை குறைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை இல்லை. வளர்ச்சி திட்டங்கள் இல்லை. இந்த பட்ஜெட்டின்மூலம் செல்ல பிராணிகளின் உணவுகளின் விலை குறையுமே தவிர வளர்ச்சி ஒன்றும் ஏற்படாது என கூறினார்.
கம்யூனிஸ்ட் எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தா தெரிவிக்கையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைஎடுக்கப்படவில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications