இட ஒதுக்கீடு: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:அகில இந்திய மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிபிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
அகில இந்திய மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை, ஐஐடி போன்ற மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27%இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது.
இது சமூக நீதியில், ஒரு மைல் கல்லாக அமைந்தது. இதிலும் சில குறைகள் இருந்ததை நான் ஏற்கனவே கட்டி காட்டினேன். அது விரைவில்தீர்க்கப்படும் என நம்புகிறேன். இந்த இடஒதுக்கீடு மூலம் படித்தவர்கள் குடும்பத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தான் பலன்பெறுவார்கள்.
அதே நேரத்தில் பல உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு குறைந்த அளவு இடங்களே கிடைக்கும் நிலையுள்ளது. இந்தஇடஒதுக்கீடு மத்திய அரசு அகில இந்திய அளவில் இளங்கலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தும் நுழைவு தேர்வுக்குநீடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
உதாரணத்துக்கு அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் உள்ளிட்ட உயர் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் நுழைவு தேர்வுகளில் இடதுக்கீடுஇல்லை. மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், இந்த தேர்வுகள் மூலம் தான் நிரப்பப்படுகிறது.
ஆனால் இவற்றில் இடஒதுக்கீடு இல்லாததால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அகில இந்திய உயர்நிலை மருத்துவ கல்விநுழைவு தேர்வில் சமீபத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதை நான் வரவேற்கிறேன். இதன்மூலம் இந்த இன மாணவர்கள் மட்டும் பயன் அடைவார்கள். இதேபோன்ற திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டிலும் உள்ளது.
இந்த நுழைவுத் தேர்வு இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டோருக்கும் நீடிக்க வேண்டும்
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது தொடர்பாக 27ம் தேதி உங்களுக்கு நான் கடிதம் எழுதி இருந்தேன்.இலங்கை கடற்படையினர் தாக்குதல் தொடர்வது குறித்து இப்பொழுது ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளேன்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மீன் பிடிக்க நாட்டு படகில் சென்றுள்ளனர். அவர்கள் மீது இலங்கை கடற்படையினர்கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் சேவியர் (26) என்ற மீனவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
இலங்கை கடற்படையினரின் இது போன்ற தாக்குதல் தமிழக கடலோர பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்றவிரும்பத்தகாத செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
நாள்தோறும் நஞ்சு கக்கும் ஜெ.:
இதற்கிடையில் திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நாள்தோறும் நஞ்சு கக்கும் அறிக்கைகளைவெளியிட்டு வருகிறார் ஜெயலலிதா என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
திமுக தலைவராகிய நான் 5வது முறை ஆட்சிப் பொறுப்பேற்று, தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகநிறைவேற்றி வருகிறேன்.
சாதனைகளின் சரித்திரம் படைக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி அமைந்திருப்பதை சகித்துக் கொள்ள முடியாமல், எரிச்சலின் பேருருவாகத் தன்னைஅடையாளம் காட்டிக் கொள்கிற எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, நாள்தோறும் நஞ்சு கக்கும்அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
தேள்போல் கொட்டுகிற அவரது அறிக்கைகள், உண்மை என்பதற்கு துளியும் இடம் இல்லாத குற்றச்சாட்டுக்கள், ஆகியவற்றை தன் அம்பாறாத்துணியில் அடுக்கி வைத்துக் கொண்டு அந்தக் காதறுந்த ஊசிகளைக் கணைகளென கருதி, ஏடுகள் வழியாக என்னை நோக்கி எய்து வருகிறார்.
பதவியை இழந்து அவர் பதறித் துடிப்பதையும், மக்கள் ஆதரவுடன் நாம் பரிபாலனம் செய்வதையும் அவருக்குக் காணச் சகிக்கவில்லை. அதன்விளைவாகத்தான் நாராச நடையில், நாள்தோறும் அவர் அறிக்கைகள் விடுக்கிறார்.
நான் செயல்பட முடியாதவனாம், என்னை ஊர் ஊராக இழுத்துக் கொண்டு போய் வேடிக்கை காட்டுகிறார்களாம். இது ஜெயலலிதா விடுக்கும்கணைகளில் ஒன்று. இப்படித்தான் எம்.ஜி.ஆர் குறித்தும் அவர் கூறினார். எம்.ஜி.ஆரால் செயல்படமுடியவில்லை. என்னை முதல்வராக்குங்கள் என்று ராஜீவ் காந்திக்குக் கடிதம் எழுதினார்.
அந்த சதி முயற்சி எப்படி சரிந்து போனதோ அதேபோலத்தான் இப்போது ஜெயலலிதா தொடங்கியுள்ள முயற்சிகளும் முனை முறிந்து போகும்.இது என்னை விட அவருக்கே நன்கு தெரிந்திருக்கிற காரணத்தால்தான் தன் பக்கம் உள்ள தொண்டர்களை இழுத்துப் பிடிக்கும் விதமாக இதோவருகிறது அதிமுக ஆட்சி என்று ஆரூடம் வெளியிடுகிறார்.
மேலைக்கே வாழ்க்கைப்படுகிறேன், கழுத்தே பொறுமையாக இரு என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. என்னதான் தலைகீழாக வஞ்சகம்,சதி, பொய், புரட்டு என்று கம்பங்களில் ஏறி கர்ணம் போட்டாலும், மீண்டும் ஒரு முறை ஜெயலலிதா கையில் ஆட்சியைக் கொடுக்க மக்கள்தயாராக இல்லை.
இதை உணர்ந்து கொண்டு அவர் வாயை மூடிக் கொண்டிருப்பது நாட்டுக்கும் நல்லது, அவருக்கும் நல்லது. அவரது அபத்தமான அறிக்கைகளைஇதைத் தவிர நான் வேறு ஒன்றும் விடையளிக்கப் போவதில்லை, அதற்கு அவசியமும் இல்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.
சிறந்த பட்ஜெட்: லாலுவுக்கு பாராட்டு
இதற்கிடையில் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு சிறந்த பல திட்டங்களை அறிவித்ததற்காக மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு கருணாநிதிபாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையிலான சிறந்த பட்ஜெட்டை தாக்கல்செய்ததற்காக பாராட்டுகிறேன்.
பெண்கள் முதல் முதியோர் வரை, பால் மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் என அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டிருப்பதுமகிழ்ச்சியளிக்கிறது.
பயணக் கட்டணத்தைக் குறைத்திருப்பது வரவேற்புக்குரியது. பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.715.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும்2007-2008 நிதியாண்டில் ரூ.446.22 கோடி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி-நாகர்கோவில்-காரைக்கால், கொல்லம்-திருநெல்வேலி-திருச்செந்தூர், விழுப்புரம்-காட்பாடி, திருச்சி-மானாமதுரை மற்றும் விழுப்புரம்-மயிலாடுதுறை ஆகியரயில்பாதை திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும்,
கோவை-நாகர்கோவில் (வழி மதுரை), புவனேஸ்வரம்-ராமேஸ்வம், யஷ்வந்த்பூர்-சென்னை, எழும்பூர் -நாகர்கோவில் மற்றும் எழும்பூர்-ராமேஸ்வரம் வழிகளில் 5புதிய விரைவு ரயில்கள் அறி.கப்படுத்தப்படும் என்பதும் சிறப்பான அறிவிப்பாகும்.
புதிய அகலப்பாதை பணிகள், அகலப்பாதையாக மாற்றி அமைக்கும் 2 திட்டங்கள், ஆய்வுப் பணிகள் போன்ற அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுமக்கள் இதைப் பெரிதும் வரவேற்பார்கள்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 94 ரயில்வே மேம்பால திட்டங்களில் தமிழகத்திற்கு மட்டும் 38 திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் கோரியதற்கிணங்க சேலம் ரயில்வே கோட்டத்திற்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும், 3 மாதத்திற்குள் சேலம் கோட்டம் முழு அளவில் இயங்கும் எனஅறிவிப்பு செய்ததும் தமிழக மக்களை பெரிதும் மகிழ்ச்சியடையச் செய்யும்.
தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களைப் பெற ரயில்வே இணை அமைச்சர் மேற்கொண்ட முயற்சிக்களுக்காக அவருக்கும் எனது பாராட்டுதல்கள் என்றுகூறியுள்ளார் கருணாநிதி












Click it and Unblock the Notifications