நீதிபதி மீது கல் எறிந்த கைதி
பார்மர் (ராஜஸ்தான்):இரட்டைக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கைதி, நீதிபதி மீது கல்லை விட்டு எறிந்ததால் பரபரப்புஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஜராம். இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவருக்கு நேற்று பார்மர்மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கஜராம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால்அவருக்கு நீதிபதி சந்திர சேகர் சர்மா ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். தீர்ப்பைக்கேட்டதும் கோபமடைந்த கஜராம், மறைத்து வைத்து எடுத்து வந்திருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து நீதிபதி மீது எறிந்தார்.
கல் நீதிபதியின் தோள்பட்டையைத் தாக்கிக் காயப்படுத்தியது. இந்த சம்பவத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உடனடியாகசுதாரித்துக் கொண்டு கஜராமை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
கல்வீச்சில் காயமடைந்த நீதிபதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது கஜராம் மீது நீதிபதி மீது கல்வீசித் தாக்கியது தொடர்பாகபுதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications