குப்பையில் வெடித்த பைப் குண்டு: 3 பேர் காயம்
திட்டக்குடி:கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே குப்பையை தீ வைத்து எரித்தபோது, அதில் கிடந்த பைப் வெடிகுண்டுகள் பலத்த சப்தத்துடன் வெடித்துச்சிதறின. இதில் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும் 11 பேர் மயக்கமடைந்தனர்.
திட்டக்குடியை அடுத்துள்ளது ஆலம்பாடி கிராமம். இங்குள்ள ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை தூர் வாரும் பணி நடந்து வருகிறது. நேற்றுகாலை 60 பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காசி என்கிற தொழிலாளி, கிருஷ்ணசாமி என்பவரின் வீட்டுக்கு அருகே சாலையோரம் கிடந்த குப்பைகளை ஒன்றாகப் போட்டுக்கொண்டிருந்தார். குப்பை அதிகம் இருந்ததால், அதை அப்படியே தீவைத்துக் கொளுத்தினார்.
அந்தக் குப்பைக்குள் 2 பைப் வெடிகுண்டுகள் கிடந்துள்ளது. அது காசிக்குத் தெரியவில்லை. அவர் குப்பைக்குத் தீவைத்தபோது, பைப் குண்டுகள்பலத்த சப்தத்துடன் வெடித்தன.
இதில் காசியின் வலது காது பிய்ந்து போனது. அவருக்கு அருகில் நின்று கொண்டு வேலை பார்த்த சித்ரா (20), சங்கீதா (18) ஆகியோரும்காயமடைந்தனர். 3 பேரும் உடனடியாக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குண்டு வெடித்ததால் எழுந்த புகையை நுகர்ந்த 11 பேர் மயக்கமடைந்தனர். கண் எரிச்சலால் துடித்தனர். அவர்களும் மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றனர்.
குப்பைக்குள் குண்டு வந்தது எப்படி என்பது குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் மேலும் குண்டுகள் இருக்கலாம்என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.
இப்பகுதியில் தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருக்கக் கூடும் என்றும் போலீஸார்சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் தீவிர வேட்டை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications