இலங்கைக்கு இந்திய போர் கப்பல்?
கொழும்பு:இலங்கை அரசுக்கு போர்க்கப்பலை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது கவலை தருவதாக இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள்கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ராணுவத்துக்கு போர்க்கப்பல் ஒன்றை வாடகைக்கு அல்லது வேறுவழியில் வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2000மாவது ஆண்டு அதி நவீன போர்க் கப்பலை இந்தியா, இலங்கைக்கு வழங்கியது. ஆனால் அக்கப்பல் தற்போது பழுதடைந்து விட்டது.அதை சரி செய்வதற்காக இந்தியாவுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இக்கப்பலுக்குப் பதிலாக வேறு கப்பலை இந்தியா வழங்கியுள்ளது. இந்தக் கப்பல் கடலோரக் காவல் படையினரால் முன்புபயன்படுத்தப்பட்டதாகும்.
இலங்கை ராணுவத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் வழங்கப்பட மாட்டாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்தியத்தலைவர்களும் கூறியிருந்தனர். ஆனால் தற்போது அது மீறப்பட்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக் கொண்டு அப்பாவித் தமிழ் மக்களை இலங்கை அரசு கொன்று குவித்து வருகிறது. இனப்போரைநடத்தி வருகிறது. இதில் கடற்படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கடலோர தமிழகக் கிராமங்களை ஏவுகணைகளை வீசி கடற்படை அழித்துவருகிறது.
எனவே இந்த நிலையில், இந்தியாவும் பிற நாடுகளும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை இலங்கை அரசுக்குத் தரக் கூடாது. இந்த ஆயுதங்கள்தமிழ் மக்களை அழிக்கவே வாங்கப்படுகிறது என்பதை அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications