தாலிக்கு குட்பை: காதலனுடன் ஆசிரியை ஓட்டம்
வேலூர்:கணவன் கட்டிய தாலியை கழற்றி, சாமி படத்தின் முன்பு மாட்டி வைத்து விட்டு, கள்ளக் காதலருடன் ஓடிப் போனார் கல்லூரி ஆசிரியை.இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுந்தர். சி.ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் கவிதா (27)தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
தன்னுடன் பணியாற்றி வந்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஜயராகவன் என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். 6ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது. கல்யாணம் ஆன 3 ஆண்டுகள் கழித்து ஒரே பிரசவத்தில் கவிதாவுக்கு 3 குழந்தைகள்பிறந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 3 குழந்தைகளும் இறந்து போயின.
பின்னர் கவிதா கருத்தரிக்கவில்லை. இதையடுத்து சென்னை வந்த கணவனும், மனைவியும் சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ளஎஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர்.
கவிதா பயோடெக்னாலஜி துறையில் ஆசிரியையாக இருந்தார். அதே துறையில் விரிவுரையாளராக இருந்தவர் அலெக்ஸ் ராஜன். இவர்சேலையூரைச் சேர்ந்தவர். கவிதாவுக்கும், அலெக்ஸ் ராஜனுக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கள்ளக்காதல் கடந்த மாதம், மாணவ, மாணவியருடன் வட இந்தியாவுக்கு சுற்றுலா சென்றபோது வலுவடைந்தது. இருவரும் ஒரேஅறையில் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் அடித்த கூத்தைப் பார்த்து சக ஆசிரியர்களும், மாணவ, மாணவியர்களும் கோபமடைந்துகண்டித்துள்ளனர்.
இருந்தாலும் கவிதாவும், அலெக்ஸ் ராஜனும் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஊருக்குத் திரும்பிய பிறகு கவிதாவின் செய்கைகள்விஜயராகவனுக்குத் தெரிய வர அவர் மனைவியைக் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கவிதா வீட்டை விட்டு வெளியேறினார். போவதற்கு முன்பு விஜயராகவன் கட்டிய தாலியை கழற்றி சாமிபடத்தின் முன்பு மாட்டி விட்டுப் போய் விட்டார்.
இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் விஜயராகவன் புகார் கொடுத்துள்ளார். போகும்போது 40 பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய் பணம்ஆகியவற்றையும் கவிதா எடுத்துச் சென்று விட்டதாக தனது புகாரில் விஜயராகவன் கூறியுள்ளார். இதேபோல அலெக்ஸ் ராஜனின் தாயாரும்மறைமலை நகர் காவல் நிலையத்தில் தனது மகனைக் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications