ஆந்திர எம்.எல்.சி. ஆகிறார் நக்மா!
ஹைதராபாத்:ஆந்திர மாநில எம்.எல்.சி தேர்தலில் நடிகை நக்மாவை காங்கிரஸ் கட்சி நிறுத்துகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வந்த நக்மா, சரத்குமார் விவகாரத்தில் சிக்கிய பின்னர் மும்பைக்குத்திரும்பிச் சென்றார். நடிகை ஜோதிகாவின் அக்காவான நக்மா, தற்போது போஜ்பூரி படங்களில் நடித்து வருகிறார்.சினிமாவில் பிசியாக இருந்தபோது பல சர்ச்சைகளில் சிக்கியவர் நக்மா. கார்த்திக், சரத்குமார், கங்குலி என பலருடன் இணைத்துப் பேசப்பட்டவர்.பின்னர் சினிமா மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்தவுடன் அரசியல் பக்கம் பார்வையைத் திருப்பினார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி பதவிக்குப் போட்டியிட கடுமையாக முயன்றார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில் தற்போது ஆந்திர மாநிலத்திலிருந்து எம்.எல்.சி (சட்டசபை மேலவை) உறுப்பினராகும் யோகம் நக்மாவைத் தேடி வந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் புதிதாக மேலவை உருவாக்கப்பட்டள்ளது. வருகிற 17ம் தேதி இதற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில்நக்மா நிறுத்தப்படவுள்ளாராம்.
இதில் மாநில ஆளுநர் 12 பேரை எம்.எல்.சிக்களாக ஆக்க முடியும். அந்த கோட்டாவின் கீழ் நக்மாவை உள்ளே திணிக்க காங்கிரஸ் கட்சி முடிவுசெய்துள்ளது. நக்மாவை எம்.எல்.சியாக பரிந்துரைக்குமாறு கோரி ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபிஆசாத், ஆந்திர மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூருக்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.
ஆந்திர மாநிலத்தில் சட்டமேலவை அமைய குலாம் நபி ஆசாத்தான் பெரிதும் உதவினார். எனவே அவரது பரிந்துரையை ஏற்று நக்மா எம்.எல்.சி.ஆகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் எம்.எல்.சி. ஆக்கி விட்டு அதன் பின்னர் ராஜ்யசபாவுக்குள் நக்மாவைக் கொண்டு வர காங்கிரஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நக்மாவை எம்.எல்.சி ஆக்குவதன் மூலம் விஜயசாந்த்தின் கவர்ச்சி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவருக்கு கவுண்டராக நக்மாவைக் களம்இறக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications