ஏர் இந்தியா, இந்தியன் இணைப்புக்கு ஓ.கே!
டெல்லி:இந்தியன் (முன்னாள் இந்தியன் ஏர்லைன்ஸ்) மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது அரசு சார்பில் இந்தியன் மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரு விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தியன் நிறுவனவிமானங்கள் பெரும்பாலும் உள்ளூர் சேவையிலேயே அதிகம் ஈடுபடுத்தப்படுகிறது. வெளிநாட்டுச் சேவையில் ஏர் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இரு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள்தொடங்கின. தற்போது இந்த இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 120 விமானங்கள், 30 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட மிகப் பெரிய விமான நிறுவனமாக இவை இயங்கும். இதன் மூலம்சர்வதேச அளவிலான போட்டியையும் சமாளிக்க முடியும். இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்ட பின்னரும், தொடர்ந்து அரசு நிறுவனமாகவேஇவை இயங்கும்.
2010-11ம் ஆண்டு வாக்கில் ஒருங்கிணைந்த விமான நிறுவனத்தின் ஊழியர், விமான விகிதாச்சாரம் 200:1 என்ற கணக்கில் இருக்கும். தற்போதுஏர் இந்தியா நிறுவனம் புதிதாக 68 போயிங் ரக விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது. இந்தியன் நிறுவனம் 43 ஏர் பஸ் ரகவிமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து இணைப்புக்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கும். இன்னும் 3மாதங்களுக்குள் இவை முடிவடையும் எனத் தெரிகிறது.
இணைப்பின் மூலம் ஊழியர்களின் நலன்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என மத்திய சிவில் போக்குவரத்துத் துறை அமைச்சர்பிரபுல் படேல் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications