லட்சுமியான லட்சுமணன் கோர்ட்டில் ஆஜர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:பெண்ணைக் கடத்திய வழக்கில் தேடப்பட்ட லட்சுமணன் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் லட்சுமி என்ற பெயரில் பெண்ணாக மாறி ஆஜரானதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சரிதா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த2000மாவது ஆண்டு டிசம்பர் 6ம் தேதிக்கு வேலைக்குப் போய் விட்டு வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து விசாரித்தபோது சேகரின் உறவினர் மணி என்பவரின் மகன் லட்சுமணன்தான் சரிதாவைக் கடத்திச் சென்றதாக தெரிய வந்தது.இதையடுத்து லட்சுமணனையும், சரிதாவையும் போலீஸார் தேடி வந்தனர்.

Lakshmi (a) Lakshmanan

இந் நிலையில் டிசம்பர் 15ம் தேதி சரிதாவும், லட்சுமணனும் போலீஸாரிடம் பிடிபட்டனர். அவர்களை மதுரை 6வது நீதித்துறை நடுவர்நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சரிதா கூறுகையில், நான் மேஜர் பெண். நானும், லட்சுமணனனும் காதலித்தோம். ஆனால் எங்களதுதிருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அழகர்கோவில் மலையில் வைத்து முருகன்கோவிலில் கல்யாணத்தை முடித்து விட்டோம் என்றார்.

அதன் பின்னர் லட்சுமணன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் வழக்கு முடியாமல்இழுபறியாக இருந்தது.

இந்த நிலையில், லட்சுமணன் மும்பை சென்று பாலின அறுவைச் சிகிச்சை செய்து லட்சுமியாக மாறி விட்டார். இதற்காக அவர் ரூ. 28,000செலவழித்துள்ளார். இதையடுத்து லட்சமணனை (லட்சுமியை) கைது செய்ய போலீஸார் மும்பை செல்லத் திட்டமிட்டனர்.

அதை அறிந்து விட்ட லட்சுமணன் என்கிற லட்சுமி மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதனால் புது சிக்கல் எழுந்தது. போலீஸார்லட்சுமணனைத்தான் தேடி வந்தனர். ஆனால் இப்போது அவர் லட்சுமியாக வந்து நின்றதால் என்ன செய்வது என்று பு>யாமல் குழம்பினர்.

Lakshmi (a) Lakshmanan

நீதிபதியிடம் லட்சுமணன் என்கிற லட்சுமி கூறுகையில், நானும், சரிதாவும் காதலித்தோம். ஆனால் அவரை திருமணம் செய்து வைக்க சரிதாவின்பெற்றோர் மறுத்து விட்டனர். மேலும், என் மீது கடத்தல் வழக்கு போட்டனர். இதில் கைதாகி நான் ஜாமீனில் விடுதலை ஆனேன்.

அதன் பின்னர் 2001ம் ஆண்டு நான் மும்பை சென்றேன். அங்கு அரவாணிகளின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின்னர் 2002ம் ஆண்டு மார்ச்10ம் தேதி எனது ஒப்புதலுடன் அறுவைச் சிகிச்சை நடந்து நான் அரவாணியாகி விட்டேன்.

அதற்கு முன்பே எனக்கு மன ரீதியாக பெண்களின் உணர்வுகள் இருந்தன. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் முழுமையான பெண்ணாகஉணர்ந்தேன்.

நான் தான் லட்சுமணன் என்பதற்கு எனது உடலில் உள்ள சில அடையாளங்களே போதும். எனது கையில், லட்சுமி சரிதா என பெயரையும் பச்சைகுத்தியுள்ளேன் என்றார் லட்சுமணன் என்கிற லட்சுமி.

அவரது வாக்குமூலத்தைக் கேட்டுப் பதிவு செய்து கொண்ட நீதிபதி கண்ணன், அவர் மீதான கைது வாரண்ட்டை ரத்து செய்வது குறித்துபரிசீலிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

பின்னர் லட்சுமி அலைஸ் லட்சுமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் சமுதாயத்தையும், காவல்துறையையும் மதிக்கிறேன். அதனால்தான்நான் சரணடைந்தேன். நான் கொலை செய்யவில்லை, திருடவில்லை. எங்களைப் போன்றவர்களை சமுதாயம் மன்னிக்க வேண்டும் என்றார்.சரி.. சரிதா எங்கப்பா...?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+