விமானத் தாக்குதலில் 18 புலிகள் பலி
கொழும்பு:வவுனியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் மீது இலங்கை விமானப் படை நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 18 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இலங்கை பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. வவுனியாவில் உள்ள புலிகளின்பயிற்சி முகாம்கள் மீது விமானப் படை மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
மிக் ரக போர் விமானங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 18 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறைதகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுதொடர்பான விரிவான தகவல்களை அது வெளியிடவில்லை.
தமிழர்களை காக்க கோரும் இலங்கை எம்.பிக்கள்:
இந் நிலையில் இலங்கை தமிழ் தேசிய கூட்டணி எம்.பிக்களான சிவாஜி லிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் இன்று சென்னை வந்தனர்.செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில்,
இலங்கை ராணுவம் தமிழர்களை கொடுமைப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இலங்கை ராணுவ நடவடிக்கைகளைஉடனடியாக நிறுத்துவதற்கு வழிவகை காண வேண்டும். போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
கடந்த 26-ந் தேதி விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனை நாங்கள் சந்தித்து பேசினோம். தமிழகத்தின் வழியாக எந்தஆயுதக் கடத்தலிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட வில்லை என்று அப்போது அவர் உறுதியாக தெரிவித்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் எதிலும் தமிழகத்தில் புலிகள் ஈடுபடவில்லை என்று கூறிய அவர், அதுபோன்ற சட்ட விரோத செயல்களில்ஈடுபடுவோர் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம் என்று தெரிவித்தார்.
தமிழ் மக்களை கொடுமைப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் இலங்கை அரசுக்கு ஆதரவான சக்திகள் இதுபோன்ற நடவடிக்கைகளில்ஈடுபடுவோர்க்கு உறுதுணையாக இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது என அவர் கூறினார்.
பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கு ராணுவ உதவி அளித்து வருகின்றன. பாகிஸ்தான் விமானப் படையை சேர்ந்தவர்கள்தமிழர் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் எக்காரணத்தை கொண்டும் விடுதலைப்புலிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கடத்தல் என்பது காலங்காலமாகநடந்து வருகிறது. இதற்கும், புலிகளுக்கும் தொடர்பில்லை. இதை கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கலாம்.
இலங்கை பிரச்சனையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரல் எழுப்பினால்தான் இலங்கை அரசை செவிசாய்க்கவைக்க முடியும். எனவே, தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கிடையே உள்ள கருத்து வேற்றுமைகளை மறந்து இந்தபிரச்சனைக்கு தீர்வு காண ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும்.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருவதை நாங்கள் வன்மையாக கண்டித்துள்ளோம். இதனை தடுத்து நிறுத்தவேண்டும். தமிழக முதலமைச்சர் ஒட்டுமொத்த தமிழர்கள் அனைவருக்கும் மூத்த தலைவராவார் என்றனர்.
பேட்டியின் போது உலகத்தமிழ் பேரவையின் தலைவர் ஜனார்த்தனம் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications