காவிரி விவாதத்திற்கு சபாநாயகர் அனுமதி?
பெங்களூர்:லோக்சபாவில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்த விவாதத்திற்கு அனுமதி அளிப்பதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தன்னிடம் உறுதிஅளித்துள்ளதாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேசியத்தலைவருமான தேவே கெளடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து லோக்சபாவில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படும்என சோம்நாத் சாட்டர்ஜி உறுதியளித்துள்ளார். விவாதத்தின்போது கர்நாடகத்தைச் சேர்ந்தஅனைத்து எம்.பிக்களும் நியாயமற்ற நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து ஆணித்தரமாக எடுத்துரைப்பார்கள்.
நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் அமைதியாக நடந்து கொண்டுள்ளன. இது வரவேற்புக்குரியது.
கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்கும் வரையில், நடுவர் மன்றத் தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் இடம்பெறாது என்று நம்புகிறோம்.
நான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ரகசியமாக சந்தித்ததாக வெளியான தகவல் அப்பட்டமான பொய். கடைசியாக 2005ம்ஆண்டுதான் நான் சோனியாவை சந்தித்தேன். அதன் பிறகு சந்திக்கவே இல்லை.
கர்நாடகத்தில் தற்போது உள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சியையும் நான் ஆதரிக்கவில்லை. அதற்கு எனது ஆசியும்கிடையாது. இது எனது ஒப்புதல் இல்லாமல் அமைந்த ஆட்சி.
தேசிய அளவில் மாறி வரும் அரசியல் சூழ்நிலையின் வெளிப்பாடுதான் பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் முடிவுகள். இதுதவிர்க்க முடியாத மாற்றம்.
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சில தொகுதிகளில் போட்டியிடும். அங்கு யாருடனும் கூட்டணி வைக்கமாட்டோம் என்றார் கெளடா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications