ஜார்க்கண்ட் எம்.பி. சுட்டுக் கொலை
ஜாம்ஷெட்பூர்:ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பியுமான சுனில் மஹதோ, நக்சலைட்டுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹோலி பண்டிகையை ஒட்டி ஜாம்ஷெட்பூரில் கால்பந்துப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டிக்கு சுனில் மஹதோ சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
போட்டி நடந்து கொண்டிருந்தபோது அங்கு நுழைந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுனில் மஹதோவை சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டனர்.இதில் மஹதோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மஹதோவின் இரு பாதுகாவலர்கள், கட்சிக்காரர் ஒருவர் படுகாயமடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள்அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
மஹதோவின் உடல் துப்பாக்கிச் சூட்டில் சல்லடையாக துளைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மொத்தம் 15 தீவிரவாதிகள் அதி நவீன ஆயுதங்களுடன் வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்டது. அந்த இடமே பெரும் அமளி துமளியாக காணப்பட்டது. இதைப் பயன்படுத்திதீவிரவாதிகள் தப்பி விட்டனர்.
மஹதோ கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அதிர்ச்சியும், கண்டனமும்தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட்டில் பந்த்:
இதற்கிடையே சுனில் மஹதோ சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் இன்று அம்மாநிலத்தில் முழு அடைப்பு நடத்தி வருகின்றனர்.
மஹதோவுக்கு சரியான முறையில் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று கூறி ஆங்காங்கே போராட்டமும் நடந்து வருகிறது. பல இடங்களில் பேருந்துகள் மறிக்கப்பட்டு மறியல் போராட்டம்நடந்துள்ளது. கண்டனப் பேரணிகளும் நடந்துள்ளன.
இந்த நிலையில் மஹதோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில முதல்வர் மது கோடா உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications