இலங்கை போர் நிறுத்தம்: எதிர்த்த மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கைகொழும்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

சிங்கள தேசியவாதக் கட்சி இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தது. அதில் நார்வே தூதுக் குழுவின் முயற்சியால் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே கடந்த 2002ம் ஆண்டுபிப்ரவரி மாதம் ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவுக்கு தெரியாமலேயே ஏற்படுத்தப்பட்டது. எனவே இதற்குசட்டப்பூர்வ அந்தஸ்து கிடையாது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஸ்ரீகண்ட ராஜா தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தார். அதேசமயம், போர் நிறுத்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்றுஅறிவிக்கக் கோரி இன்று புதிதாக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை அவர் விசாரணைக்கு அனுமதித்தார்.

ஜனதா விமுக்தி பெரமுனா, புத்திஸ்ட் மாங்க் ஜாதிகா ஹேல உருமயா ஆகிய இரு கட்சிகளும் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி, இரு தரப்பும் கடும் மோதலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

பெரும் போர் வெடிக்கும்: புலிகள் எச்சரிக்கை

இதற்கிடையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உலக நாடுகள் உறுதியான, இறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறினால், இலங்கை அரசின் தமிழர் விரோதக் கொள்கையை தடுத்து நிறுத்தத்தவறினால் இலங்கையில் பெரிய அளவில் போர் வெடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் எச்சரித்துள்ளார்.

இலங்கைப் பிரச்சினையில் நிலவும் தேக்க நிலையை உடைக்கும் முயற்சியில் நார்வே தூதுக்குழு இறங்கியுள்ளது. நார்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் இதற்காக கொழும்பு வந்துள்ளார்.

நேற்று அவர் கிளிநொச்சி சென்று தமிழ்ச்செல்வனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது இலங்கை அரசின் மீதும், ராணுவம் மீதும் நார்வே தூதரிடம் தமிழ்ச்செல்வன் சரமாரியாக புகார்கள் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் இலங்கை ராணுவம் அதிக அளவில் படைகளைக் குவித்து வருகிறது. ஆயுதங்களையும் பெருமளவில் சேர்த்து வருகின்றனர்.

இது உலக நாடுகளுக்கும் தெ>யும். ஆனால் இதைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் தவறி விட்டன. விடுதலைப் புலிகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுக்க ராணுவம் தயாராகி வருகிறது. இதைஎதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.

இலங்கைப் பிரச்சினையில் உலக நாடுகள் மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருவது வருத்தம் தருகிறது. தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசை உலகநாடுகள் கண்டிக்கத் தவறி விட்டன. இத்தகைய போக்கால் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது.

இலங்கை அரசின் நிலை தொடர்ந்தால், உலக நாடுகள் தொடர்ந்து மென்மையான போக்கைக் கையாண்டால் பெரும் போர் வெடித்து, ரத்த ஆறு ஓடுவதைத் தவிர்க்க முடியாது என்று எச்சரித்துள்ளார்தமிழ்ச் செல்வன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+