ஆசை காட்டி மோசம்: போதகர் மீது பெண் புகார்

Subscribe to Oneindia Tamil

சேலம்:கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னைக் கற்பழித்து ஏமாற்றி விட்டதாக கிறிஸ்தவ மதபோதகர் மீது இளம்பெண் காவல் நிலையத்தில்புகார் கொடுத்துள்ளார்.

சேலம் பச்சப்பட்டியைச் சேர்ந்தவர் ரோசி (27). பெற்றோர் விபத்தில் இறந்து விட்டதால் உறவினரான கந்தசாமி என்பவரது வீட்டில் வளர்ந்துவந்தார் ரோசி.

நேற்று சேலம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார் ரோசி. அதில், மன நிம்மதிக்காக சின்ன திருப்பதியில் உள்ளகிறிஸ்தவ சபைக்கு போய் வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக இங்கு போய் வருகிறேன்.

அங்கு மேஷக் என்பவர் போதகராக உள்ளார். அவருக்கும், எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாகமேஷக் உறுதியளித்தார்.

இதனால் அவரை முழுமையாக நம்பி என்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டேன். பலமுறை இருவரும் உல்லாசமாகஇருந்துள்ளோம். இந்த நிலையில் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அவர் திட்டமிட்டுள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து மேஷக்கிடம் நியாயம் கேட்டபோது, என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். அவர் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அதற்கு காவல்துறை உதவ வேண்டும் என்று கூறியிருந்தார் ரோசி.

இதையடுத்து அம்மாப்பேட்டை போலீஸார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேஷக்கிடம் விசாரணை நடத்த போலீஸார் சென்றபோதுஅவர் தலைமறைவாகி விட்டார். ரோசிக்கு ஆதரவாக பச்சப்பட்டி மக்களும் திரண்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+