98 கவுன்சிலர்களை எதிர்த்து வழக்கு: தொடர்ந்தவருக்கு ரூ. 10,000 ஃபைன்
சென்னை:சென்னை மாநகராட்சியில் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்து வெற்றி பெற்ற 98 கவுன்சிலர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், திமுக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்களும் உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து தங்களது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டுதேர்தலை சந்தித்தனர்.
இதன் மூலம், கள்ள ஓட்டு, வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல், வன்முறை ஆகிய குற்றச்சாட்டுக்களை அவர்களே ஒப்புக் கொண்டதாகிறது.
எனவே இந்த 98 பேரும் கிரிமினல் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். நீதிபதிமுருகேசன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிந்து விட்டன. இந்த நிலையில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில்இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் விதிப்பதாக உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications