நள்ளிரவில் மனைவி மீது ‘டுமீல்‘: விவசாயி கைது
தர்மபுரி :தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே நள்ளிரவில் மனைவியை துப்பாக்கியால் சுட்டார் கணவர்.ஆனால் அதிர்ஷ்டவசமாக குண்டு தோள்பட்டையில் பாய்ந்து சென்றதால் அந்தப் பெண் உயிர் பிழைத்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சென்ன கிருஷ்ணன். இவர் ஒருவிவசாயி. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஜெயச்சந்திரன், அருண்குமார் ஆகிய மகன்களும்,ராஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
![]() |
தினசரி குடிக்கும் பழக்கம் சென்ன கிருஷ்ணனுக்கு இருந்தது. வீட்டுக்கு வரும்போதே போதையில்தான்வருவாராம். இந்த நிலையில் ஜெயலட்சுமியின் நடத்தையில் சென்ன கிருஷ்ணனுக்கு திடீர் என சந்தேகம்எழுந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்குமாம்.
சம்பவத்தன்று இரவும் குடித்து வீட்டுக்கு வந்துள்ளார் சென்னகிருஷ்ணன். வீட்டுக்கு வந்ததும் மனைவியுடன்தகராறில் ஈடுபட்டார். நள்ளிரவு வரை இந்த சண்டை நீடித்துள்ளது. மனைவியை தாறுமாறாக அடித்துள்ளார்.அப்படியும் ஆத்திரம் தீராத சென்னகிருஷ்ணன், திடீரென தனது நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்துமனைவியை சுட்டார்.
அதில் ஜெயலட்சுமியின் வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்ஜெயலட்சுமி. இதைப் பார்த்த 3 குழந்தைகளும் கதறி அழ ஆரம்பித்தனர். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஜெயலட்சுமியை சேலத்திற்குக் கொண்டு வந்து தனியார் மருத்துவமனையில்சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெயலட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவியை சுட்ட பின்னர்துப்பாக்கியுடன் ஓடி விட்ட சென்ன கிருஷ்ணன், பாப்பிரெட்டிபட்டி காவல் நிலையத்திற்குச் சென்றுசரணடைந்தார்.
அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications