இரும்பு குண்டு கடத்தல்: மேலும் 3 பேர் கைது
சென்னை:பெரம்பலூரில் 4 டன் எடை கொண்ட இரும்புக் குண்டுகள் பிடிபட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக மேலும் 3 பேரை கியூ பிரிவு போலீஸார்சென்னையில் கைது செய்துள்ளனர்.
திருச்சியில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த அருள்நாதன் என்பவரது வீட்டில் கியூ பிரிவு போலீஸார் நேற்று .ன்தினம் அதிரடி சோதனைநடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் பணம் சிக்கியது.
அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் கொடுத்த தகவலின் பேரில்,பெரம்பலூரில் சோப்பு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் ரமேஷ் என்பவரது தொழிற்சாலையில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 4 டன் இரும்புக் குண்டுகள் இருந்தது தெரிய வந்தது. அருள்நாதன் மூலம் கிடைத்த தகவலின் படி பல லட்சம் பணம் ஆயுதக்கடத்தல் தொடர்பாக கைமாறியதாக தெரிய வந்தது.
அருள்நாதனிடம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக கிடைத்த தகவலின்படி, சென்னையைச் சேர்ந்த பர்கத், இலங்கை அகதிகளான பிரதீபன்,ஸ்ரீதரன் ஆகியோரை சென்னையில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
அவர்களை திருச்சிக்கு அழைத்துச் சென்று மேல் விசாரணை நடைபெற்றது.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு இரும்பு குண்டுகளை கடத்திச் செல்வதற்காக பர்கத் கோடிக்கணக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாக போலீஸார்தெரிவித்தனர். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோல ஏராளமான பணத்தைக் கொடுத்து ஆயுதக் கடத்தலை மேற்கொண்டு வந்துள்ளதாகதெரிகிறது.
தற்போது பிடிபட்டுள்ள பணத்தையும், சென்னையிலிருந்து திருச்சிக்குக் கொண்டு வந்ததாக அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
தங்களைப் போல தமிழகத்தில் பலரும் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளதால், அவர்களையும் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications