தேமுதிக மகளிர் மாநாடு: வேலூர் குலுங்கியதுவிஜயகாந்த்துக்கு பிரமாண்ட வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்:தேமுதிக மகளிர் மாநாட்டையொட்டி வேலூரில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு வேலூர் மாவட்டஎல்லையில் தேமுதிக மகளிர் அணி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக மகளிர் தினத்தையொட்டி வேலூரில் இன்று மாலை 4 மணிக்கு தேமுதிக சார்பில் மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக கோட்டைமைதானத்தில் பிரமாண்ட மேடை போடப்பட்டுள்ளது. ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டுள்ளன.

வேலூர் நகர் முழுவதும் தேமுதிக மகளிர் மயமாக காணப்படுகிறது. பெண்கள் கூட்டம் கூட்டமாக விழா நடக்கும் இடத்திற்கு வந்த வண்ணம்உள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜயகாந்த் வேலூர் வந்துள்ளார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓச்சேரியில் பிரமாண்ட வரவேற்புஅளிக்கப்பட்டது. மகளிர் அணியினர் தவிர கட்சியின் பிற அணியினரும் சேர்ந்து விஜயகாந்த்தை வரவேற்று வேலூருக்கு அழைத்துச் சென்றனர்.

வாலாஜா, சத்துவாச்சாரி ஆகிய இடங்களிலும் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் பாகாயத்தில் நடந்த தேமுதிக மாவட்ட தலைவர்வேலு-கெளரி திருமணத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

மதியம் குடியாத்தம் செல்லும் விஜயகாந்த் அங்கு ஓய்வெடுக்கிறார். மாலை 6 மணிக்கு விழா மேடைக்கு வருகிறார். மாநாட்டுக்கு மனைவிபிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்குகிறார். மகளிர் அணி செயலாளர் ரெஜீனா பாப்பா வரவேற்றுப் பேசுகிறார்.

பொதுச் செயலாளர் ரா. வசந்தன், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகின்றனர்.

மாநில மாநாடு போல மகளிர் அணி மாநாடுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜயகாந்த்தின் 500 அடி உயர கட் அவுட்டும் விழாமைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் பிரமாண்ட அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் வேலூர் நகரமேகுலுங்கிக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+