ஜெ. பேசுவது வியப்பாக உள்ளது: துரைமுருகன்
சென்னை: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட தமிழக அரசு தாமதம் செய்து வருவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுவது வியப்பாகஉள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு கர்நாடக அரசு நீர் வழங்க காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழிலில் உடனே வெளியிட வேண்டும்,இந்த விஷயத்தில் திமுக அரசு தாமதம் செய்து வருவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு துரைமுருகன் வெளியிட்டுள்ள பதில் அறிக்கை:
காவிரி நதி நீர் சம்பந்தப்பட்ட மாநிலங்களும் மத்திய அரசும் நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து ஏற்படும் ஐயங்களையும் விளக்கங்களையும் கேட்க நடுவர்மன்றத்திடம் அணுகலாம். இதற்கு 3 மாத காலம் அவகாசம் உண்டு.
இதற்கு விளக்கம் அளிக்க நடுவர் மன்றம் 1 வருடகால அவகாசம் எடுத்துக் கொள்ளும். இந்தக் கால அவகாசம் போதவில்லை என்றால் மத்தியஅரசிடம் மேலும் அவகாசம் கேட்டு பெறலாம்.
நடுவர் மன்ற தீர்ப்பு குறித்த விளக்கங்களை மத்திய அரசுக்கு அனுப்பும். இதன் பிறகு தான் மத்திய அரசு அரசிதழில் வெளியிடும். அப்படி வந்தபிறகுதான் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு முழு அதிகாரம் படைத்ததாக கருதப்படும்.
அந்த நிலை உருவாகும் வரை இடைக்காலத் தீர்ப்புதான் அமலில் இருக்கும். எனவே அரசிதழில் வெளியிடுவது சுலபமான காரியம் அல்ல.
காவிரி நதி நீர்ப் பிரச்சினையைப் போல பல நதிப் பிரச்சினைகளுக்கு அரசு நடுவர் மன்றத்தை அமைத்துள்ளது. தீர்ப்புகளும் சொல்லப்பட்டுள்ளன.அந்தத் தீர்ப்புகள் எல்லாம் எப்பொழுது அதிகாரம் படைத்த தீர்ப்புகளாயின என்பதற்கு எடுத்துக் காட்டு.
கிருஷ்ண நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 1969ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் தீர்ப்பு அரசிதழில்வெளியான தேதி 1976 ஆண்டு மே மாதம் 31ம்தேதி.
எனவே நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறித்து விவரம் அறியாதவர்கள் பேசுவது, எழுதுவது போல, விபரம் தெரிந்தவர்களும், நிர்வாகம்தெரிந்தவர்களும் பேசுவதும், எழுதுவதும் ஆச்சரியமாக உள்ளது என்று கூறியுள்ளார் துரைமுருகன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications