டாஸ்மாக் கடைகளை மூட இயலாது: கருணாநிதி
சென்னை:டாஸ்மாக் மதுக் கடைகளை மூடினால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகுவதைத் தடுக்க முடியாது, மேலும் பல்லாயிரம் கோடி ரூபாயில்செயல்படுத்தப்பட்டிருக்கும் பல திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு கருணாநிதி அளித்துள்ள பதிலில், டாஸ்மாக் மதுக் கடைகளை மூடி குடிப்பவர்களே இல்லாமல் செய்யவேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் டாஸ்மாக் கடைகளை மூடினால், கள்ளச்சாராயம் பெருகும். அண்டை மாநிலங்களிலிருந்துகடத்தல் மது இங்கு தாராளமாக விற்பனையாகும்.
அது மாத்திரமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில்நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளின் மூலம் ஆண்டுக்கு எவ்வளவு கோடி ரூபாய் இந்த அரசுக்கு வருவாயாககிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் தவறு இல்லை.
2005-06ல் ரூ. 4922 கோடியாக இருந்த வருவாய், 2006-07ல், இந்த பத்து மாதங்களில் மட்டும் ரூ. 5,999 கோடி அளவுக்கு டாஸ்மாக் மூலம்வருவாய் கிடைத்துள்ளது.
ராமர் பாலத்திற்கு ஆதாரம் இல்லை:
பாக் ஜலசந்தியில் ராமர் பாலம் என்ற ஒன்று இருப்பதற்கு தொல்லியல் துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை.
இல்லாத பாலத்தைக் காப்பற்றப் போவதாக கூறி பிரசாரத்தில் ஈடுபடுவது, சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிப் போட முயற்சிக்கும் நடவடிக்கையேஇன்றி வேறொன்றும் இல்லை.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்போர் ராமர் பாலத்தைக் கூறி அத்திட்டத்தை முடக்க முயற்சிக்கிறார்கள். அதில் அதிமுக முக்கியப் பங்கு வகிக்கிறது.
வெற்றிகரமான இத்திட்டத்தை முடக்க அதிமுக மேற்கொண்ட முயற்சிகள் பலனற்றுப் போய் விட்டன. இந்த நிலையில் தற்போது ராமர் பாலம்இருப்பதாக கூறி இத்திட்டத்தை தடுக்க முயலுகிறார்கள்.
சேது சமுத்திரத் திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டமாகும். இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.
ராமர் பாலம் தொடர்பாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, நாடாளுமன்றத்திற்கு அளித்த எழுத்துப்பூர்வமானபதிலில் கூட, ராமர் பாலம் இருப்பதற்கு தொல்லியல் துறை ஆதாரங்களோ அல்லது வேறு எந்த ஆதாரமோ இல்லை என்று கூறியுள்ளார்.
பெண்களுக்கு சம உரிமையும், சம வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளதை நான்வரவேற்கிறேன்.
1989ம் ஆண்டிலேயே பெண்களுக்கு சொத்தில் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று திமுக அரசு சட்டம் கொண்டு வந்ததை இங்கே நினைவுகூற விரும்புகிறேன். அது மட்டுமல்லாது அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டையும் முதன் முதலில் திமுக அரசுதான்அமல்படுத்தியது.
சோனியா காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருக்கும் இதே வேளையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில்பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications