பா.ம.க. எதிர்ப்பு, வழக்கு எதிரொலி;திருட்டு மண் லாரிகள் வேட்டை தொடக்கம்
காஞ்சிபுரம் :மணல் திருட்டு தொடர்பாக பாமக தெரிவித்து வரும் எதிர்ப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கின்எதிரொலியாக பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளும் லாரிகளைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கையில்குதித்துள்ளனர். நேற்று மட்டும் 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பாலாற்றில் அதிக அளவில் திருட்டுத்தனமாக மணல்எடுக்கப்படுவது குறித்து பாமக கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. பாலாற்றை சுரண்டும் திருட்டு மணல்கும்பலைத் தடுக்க அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் அதிக அளவில் நடைபெறும் மணல் கொள்ளையைத்தடுத்து நிறுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் பாமக எம்.எல்.ஏ. இளவழகன் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று திடீரென காஞ்சிபுரம் போலீஸார் திருட்டு மணல் கும்பலைப் பிடிக்கும் நடவடிக்கையில்குதித்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் கூறுகையில், செங்கல்பட்டு அருகே பாலாற்றில்திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 11 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த லாரிகள்வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
மாவட்ட எஸ்.பி. அமல்ராஜின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகேதிம்மாவரம் பாலாற்றில் 6 லாரிகளும், வில்லியம்பாக்கம் அருகே 5 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதைத் தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications