காஸ் கசிவு: கிரிக்கெட் வீரர்கள் வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

போர்ட் ஆப் ஸ்பெயின்:உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சென்றுள்ள அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் காஸ்கசிவு ஏற்பட்டதால் வீரர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக வந்துள்ள பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து ஆகிய நாட்டுஅணிகள் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹில்டன் என்ற அந்த ஹோட்டலில் நேற்று திடீரென காஸ் கசிவு ஏற்பட்டது. இதில் 14 பேர் மயக்கமடைந்தனர். ஆனால் கிரிக்கெட் வீரர்கள்யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

காஸ் கசிவைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஏராளமான தீயணைப்பு வண்டிகள், அவசர கால வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஆக்சிஜன் முகமூடிகள் ஹோட்டலில் உள்ளவர்களுக்குவழங்கப்பட்டன.

பாகிஸ்தான் அணி வீரர்கள் அதே பகுதியில் வேறு ஒரு ஹோட்டலில் தங்க முடிவு செய்தனர். ஆனால் மற்ற மூன்று அணிகளின் வீரர்களும் வேறுபகுதிக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் வீரர் சாஹித் அப்ரிடி கூறுகையில், என்ன நடந்தது என்று தெரியவில்லை. அப்போதுதான் நான் தூங்கிஎழுந்தேன். பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து கதவைத் தட்டி அறையை விட்டு வெளியேறுமாறு கூறினர்.

இருந்தாலும் நான் அதைப் பாருட்படுத்தாமல் மறுபடியும் தூங்கப் போனேன். ஆனால் பாதுகாப்பு அதிகாரி மீண்டும் வந்து அறையை விட்டுவெளியே வருமாறு கூறினார். இதையடுத்து நான் கீழே இறங்கி வந்தேன்.

ஹோட்டலின் எட்டாவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக பின்னர் தெரிந்து கொண்டேன் என்றார் அப்ரிடி.

எட்டாவது மாடியில்தான் தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்கியிருந்தனர். தென் ஆப்பிரிக்க வீரர் ஆர்த்தர் கூறுகையில், தீவிபத்தைத் தொடர்ந்து ஒருவிதநெடி வந்தது. அதை சுவாசித்தபோது என்னால் மூச்சு விட முடியவில்லை. சிரமப்பட்டேன். பின்னர் அனைவரும் கீழே வந்து விட்டோம் என்றார்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+