கர்நாடகா, கேரளாவுக்கு கருணாநிதி எச்சரிக்கை
சென்னை:தமிழகத்திலிருந்து கர்நாடகம், கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் தாக்கப்படுவதை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றுமுதல்வர் கருணாநிதி கோபமாக கூறியுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழக பதிவெண் கொண்டவாகனங்களைத் தாக்குவது, தமிழ்த் திரைப்படங்களை திரையிட விடாமல் தியேட்டர்களில் வன்முறையில் ஈடுபடுவது, தமிழ் தொலைக்காட்சிகளைதடை செய்வது என தமிழ், தமிழர் விரோத செயல்களில் கன்னட வெறியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல முல்லைப் பெரியாறு பிரச்சினைக்குப் பிறகு கேரளாவிலும் தமிழர் விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்திலிருந்து செல்லும்பேருந்துகள், லாரிகள் அவ்வப்போது தாக்கப்படுகின்றன.
கேரளா மற்றும் கர்நாடகத்தின் இந்தப் போக்குக்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனமும், கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதுதொடர்பாகஅவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநிலங்களுக்கு இடையே எழுகின்ற பிரச்சினைகளை, அரசியல்வாதிகளோ அல்லது சமூக விரோதிகளோ பயன்படுத்திக் கொண்டு அதன்விளைவாக பொதுமக்களும், பொதுச் சொத்தும் பாதிப்புக்கு உள்ளாகிற நிலைமை ஏற்படாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கொள்கைநிலை எடுப்பதில் அக்கறை உடையவர்களாக நாம் இருக்கிறோம்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்தும், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்தும் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் விரோதமாக, முறையேகர்நாடகத்திலும், கேரளாவிலும் நடத்தப்பட்ட வன்முறைச் செயல்களை இதுவரையில் பொறுமை காட்டி சகித்துக் கொண்டு விட்டோம்.
ஆனால் தமிழ்நாடு காட்டும் பொறுமையையும், அமைதியையும், கோழைத்தனம் எனக் கருதிக் கொண்டு கர்நாடக, கேரள மாநிலங்களில் உள்ள சிலசமூக விரோத விஷமிகள் இன்னமும் தமிழர்களுக்கு விரோதமான செயல்கள் என்ற பெயரால் இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு விரோதமாகசெயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக வாகனங்கள் சேதப்படுத்தப்படுவதும், திரைப்பட அரங்குகளில் தமிழ்ப் படங்கள் காட்டப்படக் கூடாது என்று ரகளைகளில் ஈடுபடுவதுமானவிஷமத்தனமான காரியங்கள், அந்த மாநிலங்களில் இனியும் தொடர்வது ஏற்கக் கூடியது அல்ல, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடியதும்அல்ல என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications