திரிகோணமலையில் கடும் சண்டை: பலர் பலி?
கொழும்பு:இலங்கையின் வட கிழக்கில் உள்ள திரிகோணமலை மாவட்டத்தில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் கடும் சண்டை நடந்தது. இதில்புலிகளின் நான்கு முகாம்கள் அழிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.
இலங்கையின் கிழக்கில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் அப்பகுதிகளில்வசித்து வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள புலிகளின் நிலைகள் மீது ராணுவம் திடீர் தாக்குதலில் இறங்கியது. பீரங்கித் தாக்குதல் மற்றும்ராக்கெட் வீசி நடத்திய தாக்குதலில் புலிகளின் நான்கு முகாம்கள் அழிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த முகாம்களில் இருந்த 150க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் அங்கிருந்து பின் வாங்கிச் சென்று விட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர்பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார்.
சண்டை குறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகளின் மூன்று ராணுவ பாசறைகள் மற்றும் ஒரு செயற்கைக் கோள் மையம் ஆகியவைதகர்க்கப்பட்டது. அங்கிருந்த புலிகள் தப்பி விட்டனர். அப்பகுதி தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது என்றார்.
இதற்கிடையே, ராணுவத்துக்கும், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து புலிகளின் செய்தித்தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், வனப் பகுதியில் எங்களது முகாம்களை அழித்து விட்டதாக பொய்யாக கூறி வருகிறதுஇலங்கை ராணுவம்.
இப்பகுதி கடந்த 24 வருடங்களாக எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. திரிகோணமலை காடுகளில் நூற்றுக்கணக்கான புலிகள் முகாம்கள் உள்ளன.ஆனால் அங்கு இப்போது விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் இல்லை. நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவது இல்லை.
ராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்தால் மிகப் பெரிய போருக்கு அது வித்திடும் என எச்சரிக்க விரும்புகிறோம்.
வனப் பகுதியில் எந்த முகாமையும் ராணுவம் பிடிக்கவில்லை. உள்ளே நுழைந்திருக்கிறார்கள் அவ்வளவுதான். இந்த சண்டையில் எந்த உயிர்ப்பலியும் ஏற்படவில்லை.
ராணுவம் முழு அளவிலான போருக்கு ஆசைப்படுவது போலத் தெரிகிறது. போரையே அவர்கள் விரும்புகிறார்கள். நாங்களும் போருக்குஆயத்தமாகவே உள்ளோம். ஆனால் இந்தப் போரினால் இலங்கையே பெரும் ரத்த ஆறாக மாறும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.
ராணுவத் தாக்குதல் தீவிரம்: தமிழர்கள் ஓட்டம்
இதற்கிடையில் இலங்கையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் ராணுவம் தீவிரத் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதுகாப்பானபகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் ராணுவம் தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தத் தொடர் தாக்குதல் காரணமாக அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் இடம் பெயர்ந்துவருகின்றனர்.
தற்போது கிழக்கில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகளிலும் பீரங்கித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்இடம் பெயர்ந்துள்ளனர்.
நேற்று மட்டும் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர். தற்போது தொப்பிகலா என்ற பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க ராணுவம் குறி வைத்துள்ளது. இந்தப் பகுதி காடுகள் நிறைந்தபகுதியாகும். இங்கு விடுதலைப் புலிகள் பெருமளவில் ஆயுதங்களைக் குவித்து படை பலத்தை அதிகரித்து வருகின்றனர்.
எனவே விரைவில் தொப்பிகலா பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே பெரும் சண்டை நடைபெறும் என்ற அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. இதவும் மக்கள் இடம்பெயர முக்கியக் காரணமாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications