பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்
கோவை:கோவை மாவட்டம் துடியலூர் அருகே பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
துடியலூர் அருகே உள்ள இடிகரையில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் தங்கவேல், ரவி. சரியாகபடிக்காத காரணத்தால் இருவரையும் ஆசிரியை சகுந்தலா பிரம்பால் அடித்துள்ளார்.
அதில் மாணவர்களின் கை வீக்கம் கண்டது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ஆசிரியை பாடம் நடத்தும்போது நாங்கள் சந்தேகம் கேட்போம்.அதனால் கோபம் அடைந்த ஆசிரியை தங்களை அடித்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி பள்ளியின் முன்பு போராட்டத்தில் குதித்தனர். ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை ஆசிரியர்ராஜேந்திரனிடம் முறையிட்டனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்மேகம் நடந்தது குறித்து விசாரணை நடத்தினார்.
அப்படியும் மக்கள் சமாதானம் அடையவில்லை. உடனடியாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து ஆசிரியை சகுந்தலா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது.
ஏற்கனவே சூலூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை சகுந்தலா பணியாற்றியபோதும் மாணவர்களை அடித்ததாக சர்ச்சையில்சிக்கினார். இதனால் இடிகரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கும் அதே பிரச்சினையில் சிக்கி தற்போது சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications