விண்ணில் விர்ர்.. இன்சாட் 4 பி ஜோர்!
பெங்களூரூ:இந்திய தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான இன்சாட் 4 பி, பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு விண்வெளி நிலையத்திலிருந்து ஏரியான் -5ராக்கெட் மூலம் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இன்சாட் 4பி செயற்கைக் கோள், நேற்று காலையே விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் ஏரியான் ராக்கெட்டில் சில பிரச்சினைகள்கண்டறியப்பட்டதால் இன்று காலை ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.35 மணிக்கு ஏரியான் விண்ணில் செலுத்தப்பட்டது. இன்சாட் 4பி தவிர, இங்கிலாந்தின் உளவுசெயற்கைக் கோளான ஸ்கைநெட் 5ஏ செயற்கைக்கோளும் ஏரியான் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
வீடுகளுக்கு நேரடி டிவி ஒளிபரப்பு வசதியை வழங்க இன்சாட் 4பி பெரும் உதவி புரியும். அதுதவிர தொலைத்தொடர்பு சேவைக்கும் இந்தசெயற்கைக் கோள் பணியாற்றவுள்ளது. இதே வரிசையில் ஏற்கனவே இன்சாட் 4ஏ விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
ஏரியான் ராக்கெட்டிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் உள்ள இஸ்ரோவின்செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டுக்கு இன்சாட் 4பி வந்தது.
இன்சாட் 4பி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது குறித்து கொரு விண்வெளி நிலையத்தில் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் செய்தியாளர்களிடம்பேசுகையில், செயற்கைக்கோள் ஹாசன் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. செயற்கைக்கோளிலிருந்து சிக்னல்கள்சிறப்பாக வரத் தொடங்கியுள்ளன.
அடுத்த சில நாட்களில் செயற்கைக்கோளின் சுற்றுப் பாதை 36 ஆயிரம் கிலோமீட்டராக உயர்த்தப்படும். இன்சாட் 4பி யை வெற்றிகரமாக ஏவபாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications