இலங்கை கடற்படைக்கு ராஜ்யசபாவில் கண்டனம்
டெல்லி:தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு நாடாளுமன்ற ராஜ்யசபாவில் இன்று கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டது. கச்சத்தீவை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள்கட்சிப் பாகுபாடின்றி வலியுறுத்தினர்.
ராஜ்யசபாவில் இன்று காலை கேள்வி நேரம் தொடங்கும் முன்பு இந்தப் பிரச்சினையை பாஜக உறுப்பினர் திருநாவுக்கரசர் எழுப்பினார்.திருநாவுக்கரசர் பேசுகையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பல மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. இது தொடர் கதையாகிவிட்டது.
இதுகுறித்து பலமுறை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்தப் பிரச்சினையில் தலையிட்டு நிவாரணம்காணுமாறு அவர் வலியுறுத்தி வந்துள்ளார்.
இருப்பினும் இந்த அக்கிரமத்திற்கு முடிவே இல்லாமல் நீண்டு வருகிறது. தற்போது விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டிபிரச்சினையைத் திசை திருப்ப முயற்சிக்கிறது.
இலங்கை அரசை, மத்திய அரசு மிகக் கடுமையாக எச்சரிக்க வேண்டும். இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும்இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்றார்.
அதிமுக உறுப்பினர் மலைச்சாமி பேசுகையில், இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியும், வெளியுறவுத்துறைஅமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் நாராயணசாமி பேசுகையில், இந்த பிரச்சினை மிகவும் சீரியஸானது. இலங்கையின் தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. இதை இப்படியே விடக் கூடாது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications