ஜெர்மனி-ஆஸ்திரியாவுக்கு தீவிரவாதிகள் வார்னிங்
துபாய்:ஆப்கானிஸ்தானிலிருந்து உடனடியாக படைகளை விலக்கிக் கொள்ளாவிட்டால், ஜெர்மனி, ஆஸ்திரியா நாடுகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்என ஈராக்கைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈராக் மீதான அமெரிக்க தாக்குதலை கடுமையாக எதிர்த்த ஜெர்மனி தனது படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. அங்கு ஜெர்மனியின்3,000 வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நேட்டோ கூட்டுப் படையின் ஒரு அங்கமாக தனது வீரர்களை ஜெர்மனி அனுப்பியுள்ளது.
அதேபோல ஆஸ்திரிய நாட்டின் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேரும் நேட்டோ படையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வீரர்கள் யாரையும் ஆஸ்திரியாஅனுப்பி வைக்கவில்லை.
இந்த நிலையில் இரு நாடுகளும் தங்களது ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் இருநாடுகளும் கடும் விளைவை சந்திக்க வேண்டி வரும் என ஈராக் தீவிரவாத அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.
இணையதளம் ஒன்றில் அந்த அமைப்பின் எச்சரிக்கை அடங்கிய ஆடியோ டேப் வெளியாகியுள்ளது. அதில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும்உடனடியாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் இரு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்.
ஜார்ஜ் புஷ்ஷுக்காவும், அவரது கூட்டாளிகளுக்காவும் நீங்கள் ஏன் உங்களது நாட்டின் பொருளாதரம் பாதிக்கப்படும் அளவுக்கு நடந்து கொள்ளவேண்டும்?
ஆப்கானிஸ்தானை விட்டு நீங்கள் வெளியேறாவிட்டால் உங்கள் நாட்டின் மீது புனிதப் போர் தொடுக்கப்படும், புனிதப் போராளிகள் தாக்குதல்நடத்துவார்கள். அந்தளவுக்கு நீங்கள் இடம் கொடுக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.
ஆஸ்திரியாவின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பி உள்ளது. ஆனால் நாங்கள் கை வைத்து விட்டால், சுற்றுலா மட்டுமல், நாட்டின் பாதுகாப்பும்கடுமையாக பாதிக்கப்படும், கேள்விக்குறியாகி விடும். ஆஸ்திரியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஆப்கானிஸ்தானிலிருந்து ஜெர்மனியப் படைகள் விலகா விட்டால், பிடித்து வைத்திருக்கும் ஜெர்மன் நாட்டுப் பெண்ணையும், அவரதுமகளையும் கொன்று விடப் போவதாகவும் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications