இலவச சைக்கிள் திட்டத்தில் 20 கோடி ஊழல்-ஜெ
சென்னை:தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் டெண்டர் எடுத்த இரண்டு நிறுவனங்களால் அரசுக்கு ரூ. 20 கோடி அளவுக்கு இழப்புஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக அரசு குறுக்கு வழியை நம்பி பயணம் செய்வதால், மக்கள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அதிமுக ஆட்சிக்காலத்தில்,மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கு மக்களிடையே ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. இதன் மூலம் மாணவர் சமுதாயம் பயன் பெற்றது. மேலும் படிப்பை பாதியில்நிறுத்தும் அவல நிலையும் நீங்கியது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை முடக்கிப் போட நினைத்தது. ஆனால் முடியவில்லை. தொடர்ந்து குறுக்கு வழியை நம்பி பயணம் செய்யதிமுக அரசு நினைக்கிறது. இதனால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நான் கொண்டு வந்த இலவச சைக்கிள் திட்டத்தை தற்போது டெண்டருக்கு எடுத்துள்ள இரு நிறுவனங்கள், மறைமுகமாக கூட்டு வைத்துக் கொண்டுசைக்கிள்களை விநியோகம் செய்துள்ளன. இது அதிர்ச்சியையும், திகைப்பையும் தருகிறது.
இந்த இரு நிறுவனங்களும் மத்தியப் பிரதேச அரசுக்குக் கொடுத்துள்ள சைக்கிள்களை விட தமிழக அரசுக்குத் தந்துள்ள சைக்கிள்கள்ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக 400 ரூபாய் விலையை நிர்ணயித்துள்ளன.
இரு நிறுவனங்களும் தமிழகத்திற்குக் கொடுத்துள்ள அதே மாடல் சைக்கிள்களைத்தான் ம.பி. அரசுக்கும் கொடுத்துள்ளன. ம.பி. அரசுக்கு சைக்கிள்ஒன்றுக்கு ரூ. 1,626 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில், மாணவிகளுக்கான சைக்கிள் ஒன்றுக்கு ரூ. 1,980ம், மாணவர்களுக்கானசைக்கிள் ஒன்றுக்கு ரூ. 2,067ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ம.பி. அரசுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களின் டயர்கள், டியூப் ஆகியவை ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்தவை. ஆனால் தமிழகத்துக்கு அப்படிவழங்கப்படவில்லை.
இந்த மோசடி விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ. 20 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த டெண்டரை ரத்து செய்யவேண்டும். திமுக அரசு செய்து வரும் மோசடிச் செயல்களை அதிமுக கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications