ஜெ உண்ணாவிரதம்-பெங்களூரில் எதிர்ப்பு!
பெங்களூர்:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிட வலியுறுத்தி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதைக் கண்டித்து அதே 18ம் தேதிபெங்களூரில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கன்னட கட்சியான கன்னட சலுவாளி வாட்டாள்கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
வாட்டாள் கூறுகையில்,
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடுவர் மன்ற தீர்ப்பை அரசாணையில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 18ம் தேதிஉண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.
நடுவர் மன்ற தீர்ப்பை அரசாணையாக மத்திய அரசு வெளியிடக் கூடாது என்று கர்நாடகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதை வெளியிடவேண்டும் என்று ஜெயலலிதாவை கூறுவதை கடுமையாக கண்டிக்கிறோம்.
ஜெயலலிதாவின் போராட்டத்தை எதிர்த்தும், கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை போக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ள மத்திய அரசைக்கண்டித்தும் வரும் 18ம் தேதி பெங்களூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். கர்நாடக விவசாயிக்களுக்கு நீதி கிடைக்கும் வரைபோராட்டம் தொடரும் என்றார் வாட்டாள்.












Click it and Unblock the Notifications