பெரியாறு: அத்துமீறி நுழைந்த கேரள பிரஸ்

Subscribe to Oneindia Tamil

கூடலூர்:முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அனுமதியின்றி உள்ளே புகுந்து புகைப்படம் எடுத்த கேரள டிவி கேமராமேன்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக அரசின் அனுமதிஇல்லாமல் யாரும் அணைக்குப் போக முடியாது.

அணைப் பாதுகாப்பில் இருக்கும் கேரள போலீஸாரைத் தவிர வேறு யாராக இருந்தாலும், தமிழக அரசின் அனுமதியைப் பெற்ற பின்னரே நுழையமுடியும். அதிலும் சமீபத்தில், பெரியாறு அணையின் கைப்பிடிச் சுவரை சில விஷமிகள் உடைத்தசம்பவத்திற்குப் பிறகு கடும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த சில தொலைக்காட்சி நிருபர்களும், கேமராமேன்களும் வல்லக்கடவு பகுதி வழியாக பெ>யாறு அணைக்குள்அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும் 2 மணி நேரம் அணைப் பகுதிக்குள் சுற்றி அணையைவளைத்து வளைத்துப் படம் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து அறிய வந்ததும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தி யாரைக் கேட்டு உள்ளே நுழைந்தீர்கள் என்றுகேட்டனர். அதற்கு கேரள பத்திரிக்கையாளர்கள், இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்பேரில் தாங்கள் வந்ததாக கூறியுள்ளனர்.

ஆனால் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே வரக் கூடாது என்று கூறி அங்கிருந்து அவர்களை வெளியேறுமாறு தமிழகஅதிகாரிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

பின்னர் கேரள பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். கேரள போலீஸாரின் அனுமதி இல்லாமல் பத்திரிக்கையாளர்கள் உள்ளேவர முடியாது என்பதால் கேரள அரசு ஏதோ ஒரு சதிச் செயலில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+