இலங்கை எண்ணை வளத்தை குறி வைக்கும் யுஎஸ்
கொழும்பு:இலங்கையில் அபரிமிதமாக உள்ள இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களைக் குறி வைத்து, அந்த நாட்டுக்கு அமெரிக்க அரசு ரூ.5.1 கோடி நிதியுதவியை அளித்துள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் மற்றும் இலங்கை நிதித்துறை செயலாளர் ஜெயசுந்தரா ஆகியோர்கையெழுத்திட்டனர்.
இலங்கையின் பெட்ரோலியப் பொருட்களின் வளத்தை பெருக்கவும், அதைப் பாதுகாக்கவும், அதுதொடர்பான ஆய்வுப் பணிகளுக்கும் இந்தி நிதிபயன்படுத்தப்படும்.
நிகழ்ச்சியில் ராபர்ட் பிளாக் பேசுகையில், இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணை வள ஆய்வுக்கு உதவ அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.
இங்கு இருக்கும் எரிவாயுவை முறையாக பயன்படுத்தினால், வெளிநாடுகளிலிருந்து இலங்கை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் குறையும்.மேலும் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும் என்றார்.
இலங்கையில் இயற்கை எரிவளம் சிறப்பாக உள்ளபோதிலும், எரிவாயு உற்பத்தியோ அல்லது பெட்ரோலியப் பொருள் உற்பத்தியோ கிடையாது.பெட்ரோலியப் பொருட்களையும், எரிவாயுவையும் வெளிநாடுகளிலிருந்தே இலங்கை அரசுஇறக்குமதி செய்கிறது. ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பேரல் பெட்ரோலியப் பொருட்களை இலங்கை இறக்குமதி செய்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இரு இந்திய நிறுவனங்களுடனும், சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடனும் இலங்கை அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம்மன்னார் பகுதியில், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு குறித்து இந்த நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
இலங்கையில் எண்ணை வளம் அபரிமிதமாக உள்ளது. இதைக் குறி வைத்தே இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதவி செய்ய முன்வந்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications