மிட்நைட் முத்துகருப்பன் கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை:கடந்த ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் கருணாநிதியின் வீடு புகுந்து அவரைக் கைது செய்து தூக்கிச் சென்று பிரபலடைந்த முன்னாள் சென்னைமாநகர காவல்துறை ஆணையர் முத்துக்கருப்பன், முதல்வர் கருணாநிதியை திடீரென சந்தித்துப் பேசினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2001ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். லுங்கி, பனியனுடன் இருந்தகருணாநிதியை கட்டாயப்படுத்தி அங்கிருந்து தூக்கிச் சென்றனர். இதனால் நாடே பரபரப்படைந்தது.
அப்போது ஆணையராக இருந்தவர் முத்துக்கருப்பன். இந்தக் கைதுக்குப் பின்னர் திடீரென முத்துக்கருப்பனுக்கும், அதிமுக மேலிடத்திற்கும் ஒத்துப்போகவில்லை. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த 2003ம் ஆண்டு முத்துக்கருப்பன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் திடீரென முதல்வர் கருணாநிதியை முத்துக்கருப்பன் சந்தித்துப் பேசினார். எந்த வீட்டில் வைத்து கருணாநிதி கைது செய்யப்பட்டாரோஅதே வீட்டில் போய் கருணாநிதியை சந்தித்தார் முத்துக்கருப்பன்.
அப்போது, கைது விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என் மீது தவறுக்காக வழக்கு போடப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன்.இதை தயவு செய்து ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாராம் முத்துக்கருப்பன்.
பின்னர் முதல்வரின் தனிச் செயலாளர் சையத் முனீர் ஹோடா, உள்துறை செயலாளர் மாலதி ஆகியோரையும் சந்தித்துத் தனித் தனியாக மனுக்கள்கொடுத்தார் முத்துக்கருப்பன்.
இதைத் தொடர்ந்து முத்துக்கருப்பன் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகாவல்துறையில் எழுந்தது.
கருணாநிதி கைது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளில் டிஐஜி கிறிஸ்டோபர் நெல்சன் மண்டபம் முகாமுக்கும், வட சென்னை இணைஆணையராக இருந்த ஜார்ஜ் திருச்சி பக்கமும் ஏற்கனவே தூக்கி அடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications