நக்சலைட் வெறியாட்டம்: 50 போலீஸார் பலி
ஜெகதால்பூர் (சட்டீஸ்கர்):சட்டீஸ்கர் மாநிலம் ரானிபோதி என்ற இடத்தில் நக்சலைட்டுகள் இன்று அதிகாலை, போலீஸ் முகாம் மீது நடத்திய வெறித் தாக்குதலில் 50 போலீஸார்உயிரிழந்தனர்.
தான்டேவடா மாவட்டம் பீஜப்பூர் அருகே உள்ள ரானிபோடி என்ற இடத்தில் போலீஸ் முகாம் ஒன்று உள்ளது. இன்று அதிகாலை இந்த முகாமைநக்சலைட்டுகள் பெரும் கும்பலாக வந்து தாக்கினர்.
முகாமில் இருந்த போலீஸார் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 50 போலீஸார் உயிரிழந்தனர். இதுகுறித்து பஸ்தார் சரக ஐஜிஆர்.கே.விஜ் கூறுகையில், சட்டீஸ்கர் ஆயுதப் படை வீரர்கள் மற்றும் சிறப்பு காவல் படை வீரர்கள் ஆகியோர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்என்றார்.
நக்சலைட் தொல்லை அதிகம் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்க உள்ளூர் ஆண், பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைக்கொண்ட சிறப்புக் காவல் படையை சட்டீஸ்கர் அரசு உருவாக்கியுள்ளது.
நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் அவர்கள் காவல்துறைக்கு உதவுவார்கள். இதற்காக அவர்களுக்கு மாதம் ரூ. 1,500 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நடந்த தாக்குதலில் போலீஸாருடன் சேர்ந்து இவர்களும் கணிசமான அளவில் கொல்லப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்புதான்இதே மாவட்டத்தில் எர்ரபோர் என்ற இடத்தில் உள்ள காவல் முகாமில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர் என்பதுநினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications