விபத்தில் 4 கன்னியாஸ்திரிகள் உள்பட 5 பேர் பலி
திருச்சி:திருச்சி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 கன்னியாஸ்திரிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
புதுச்சேரி செயின்ட் இமாகுலேட் கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் உள்ளிட்டோர் கார் மூலம் திருச்சி வந்தனர். அங்கு ஒரு துக்கநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வந்தனர்.
காரை காளியப்பன் என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி-சென்னை சாலையில், சிறுகனூர் என்ற இடத்தில் கார் வந்தபோது, திடீரென்று சாலையை விட்டுவிலகி புதிதாக போடப்பட்டு வரும் 4 வழிப் பாதைக்காக போடப்பட்டிருந்த மண் சாலையில் தாறுமாறாக ஓடியது.
பின்னர் சுதாரித்துக் கொண்ட டிரைவர் காரை மீண்டும் தார்ச் சாலைக்குத் திருப்பினார். அப்போது எதிரே நிலக்கடலை மூடைகளுடன் வந்துகொண்டிருந்த லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் டிரைவர் காளியப்பன் (23), அமலி சாந்தா (53), கிரேத்தல் லோஹா (65), பெட்ரேநிலால் (67), அல்போன்ஸ் பாத்திமா (55) ஆகியகன்னியாஸ்திரிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்த விபத்தால் அச்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி டிரைவர் பெருமாளை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications