கரும்புத் தோட்டத்தைக் கொளுத்திய விவசாயி!
திருவண்ணாமலை:சர்க்கரை ஆலையிலிருந்து கருப்பு வெட்டுவதற்கான உத்தரவு வரத் தாமதமானதால் அதிருப்தி அடைந்த விவசாயி வளர்ந்த கரும்புகளை தீவைத்துக்கொளுத்தி விட்டார்.
திருவண்ணாமலை அருகே உள்ளது சு.ஆண்டப்பட்டு கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெய்சங்கர். தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் கரும்புபயிரிட்டிருந்தார்.
இவர் மட்டுமல்லாது இவரைப் போல நூற்றுக்கணக்கான விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அருணாச்சலா சர்க்கரைஆலையில்தான் கரும்பை விற்பார்கள். ஆனால் அந்த ஆலை மூடப்பட்டு விட்டதாம்.
கரும்புப் பயிர் 12 மாதங்களில் வளர்ந்து விடும். ஆனால் கரும்பு வளர்ந்து முற்றி 6 மாதங்களாகியும், கரும்பு அறுவடை செய்ய முடியவில்லையேஎன்ற சோகத்தில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் காத்திருந்து காத்திருந்து கரும்பு வீணாவதை விட அதை ஒரேயடியாக கொளுத்தி விடலாம் என்ற முடிவுக்கு வந்த ஜெய்சங்கர், தனதுநிலத்தில் விளைந்திருந்த கரும்புக்குத் தீவைத்தார். இதில் ஒரு ஏக்கர் கரும்பு தீயில் கருகி நாசமானது.
இதைப் பார்த்து விட்ட அக்கம் பக்கத்து விவசாயிகள் ஓடி வந்து தீயை அணைத்து மீதமுள்ள நான்கு ஏக்கர் கரும்பைக் காப்பாற்றினர். இதுகுறித்துஜெய்சங்கர் கூறுகையில், 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கரும்பு போட்டேன்.
ஆனால் சர்க்கரை ஆலையிலிருந்து இன்னும் அறுவடை உத்தரவு வரவில்லை. இப்படியே இருந்தால் கரும்பு முற்றி உதிர்ந்து போகும். அதற்கு இதைஅழித்து விட்டு வேறு பயிரைப் போட்டாலாவது, கடன் தொகையைத் திருப்பிக் கொடுக்க வழி பிறக்கும். அதனால்தான் தீவைத்துக் கொளுத்தினேன்என்றார்.
சம்பந்தப்பட்ட அருணாச்சலா சர்க்கரை ஆலை தற்போது இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அறுவடைக்கான உத்தரவுவிவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. இதையடுத்து வேறு சர்க்கரை ஆலைகளுக்கு அரசு விவசாயிகளை திருப்பி அனுப்பியது. ஆனால் ஏற்கனவேஉள்ள விவசாயிகளே அதிகம் என்பதால் புதிதாக வந்த விவசாயிகளை ஏற்க அந்த சர்க்கரை ஆலைகள் மறுக்கின்றன.
ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள், ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே அறுவடை உத்தரவுகொடுக்கப்படுகிறதாம்.
நிலைமை இப்படியே தொடர்ந்தால் ஜெய்சங்கர் செய்ததைப் போல, மற்ற விவசாயிகளும் தங்களது கரும்பை கொளுத்த வேண்டிய நிலை ஏற்படும்என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications