ரூ. 216 கோடியில் புது அணை: கேரளா திட்டம்
கூடலூர்:முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே ரூ. 216 கோடி மதிப்பில் புதிய அணையைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநிலநீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் சசி கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதைத் தூக்கி கிடப்பில் போட்டு விட்டது கேரளஅரசு.
இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கேரளாவின் பிடிவாதத்தால் பயன் ஏதும் இல்லை. இந்த நிலையில் பெரியாறு அணைக்கு அருகே புதியஅணை கட்டி தமிழக மக்களின் வயிற்றில் மண்ணைப் போட புதுத் திட்டம் தீட்டியுள்ளது கேரள அரசு.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகி விட்டது. எனவே புது அணை கட்ட வேண்டும் என்று சமீப காலமாக கோரி வருகிறது கேரள அரசு. இந்தநிலையில் சமீபத்தில் புதிய நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவினர் கடந்த 2 நாட்களாக முல்லைப் பெரியாறு அணையில் பல்வேறுஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்தச் சூழ்நிலையில் புதிய அணை கட்டும் திட்டம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேரள அரசின் நீர்வள ஆதாரத் துறை தலைமைப்பொறியாளர் சசி கூறுகையில், ரூ. 216 கோடி செலவில் பெரியாறு அணை அருகே புதிய அணையை கேரள அரசு கட்ட போகிறது. அதற்கான திட்டமதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விட்டன என்று கூறியுள்ளார்.
இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசு புதிய அணை கட்டினால், அது தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பைஏற்படுத்தும்.
தமிழக அரசு இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications