குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி-அரசு விளக்கம்
டெல்லி:பெப்சி, கோலா போன்ற குளிர்பானங்களில் அதிகபட்சமாக 100 கோடியில் ஒரு பங்கு அளவுக்கு பூச்சி கொல்லி மருந்து கலக்கலாம் என மத்தியஅரசு நிர்ணயித்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பூச்சி கொல்லி மருந்து கலந்திருப்பதாவும் அதனால்நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள சுற்றுச் சூழல் விஞ்ஞான ஆய்வு மையம், ஆய்வு நடத்தி பெப்சி, கோலா ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குஅதிகமாக 30 மடங்கு பூச்சி கொல்லி மருந்து கலந்திருப்பதாக கண்டு பிடித்தது.
இதனால் சில மாநிலங்களில் இந்த குளிர்பானங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இத்தடையை எதிர்த்து குளிர்பான நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் குளிர்பானங்களில் பூச்சி கொல்லி மருந்து அதிக பட்சமாக எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசுநிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் எனக் கூறியது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசின் சுகாதாரத்துறை இதுகுறித்து முடிவெடுக்க உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்து நுகர்வோர் பாதுகாப்புஅடிப்படையில் குளிர் பானங்களில் எவ்வளவு இருக்கலாம் என்பதை முடிவு செய்து மத்திய அரசுக்கு அறிக்கையை கொடுத்தது.
அந்த அறிக்கையில், குளிர்பானங்களில் 100 கோடியில் ஒரு பங்கு அளவுதான் பூச்சி கொல்லி மருந்து கலந்திருக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது. உலகிலேயே குளிர்பானங்களுக்கு தரம் நிர்ணயம் செய்துள்ள முதல் நாடு இந்தியாதான் என அந்த குழு கூறியுள்ளது.
மத்திய அரசு இந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இனி இதுபோன்ற குளிர்பானங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பூச்சிகொல்லி மருந்து கலந்து விடாதபடி மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications