திட்டியதால் ஆத்திரம்: மனைவி, மகனைகடப்பாரையால் குத்திக் கொன்ற கணவன்
சென்னை:ஆம்பளையா நீ என்று மனைவி தன்னைத் திட்டியதால் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவி மற்றும் மகனை கடப்பாரையால் அடித்தும்,குத்தியும் கொடூரமாக கொலை செய்தார்.
சென்னை அருகே உள்ள மணலி பெரியதோப்பு பகுதியில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி செல்வி (37).இவர்களுக்கு யுவராஜ் (14) என்ற மகனும், மோனிகா என்ற 9 வயது மகளும் உள்ளனர்.
தினசரி குடித்து விட்டுத்தான் பார்த்தசாரதி வீட்டுக்கு வருவார். இதனால் அவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். இந்த நிலையில்சம்பவத்தன்று, தனது கணவரை ஆம்பளையா நீ என்று கோபமாக கேட்டுள்ளார் செல்வி. அவருடன் சேர்ந்து யுவராஜும் சேர்ந்து தந்தையைத்திட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பார்த்தசாரதி, வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து மனைவி, மகனை தாறுமாறாக அடித்துக் குத்தியுள்ளார். இதில்இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.
மகள் மோனிகாவையும் கடப்பாரையால் அடித்துள்ளார். இதில் மோனிகா காயமடைந்து மயங்கி விழுந்தார். பின்னர் வெறி கொண்டவர் போலகடப்பாரையுடன் கிளம்பியவர் நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.
இரு உடல்களையும் மீட்ட போலீஸார் மோனிகாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவளுக்கு சிகிச்சைகொடுக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications