சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேலும் 4 நீதிபதிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பழனிவேலு, வழக்கறிஞர்கள் வீரராகவன், சுதந்திரம், நாச்சிமுத்துஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப் பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.
இந்தக் கோப்பைப் பரிசீலித்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாகஇந்த நான்கு பேரையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து நான்கு புதிய நீதிபதிகளுக்கும் நாளை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். இவர்களையும் சேர்த்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications