இலங்கை ராணுவ முகாம்கள் தகர்ப்பு: 12 பேர் பலி
கொழும்பு:இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐந்து ராணுவ முகாம்கள் தகர்ப்பட்டன. 12பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியான தொப்பக்கலாவிலிருந்து இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதலைத்தொடுத்தனர். ராணுவத்தின் 5 முகாம்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த ஐந்து முகாம்களும் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர். இதுகுறித்துராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், கையெறி குண்டுகள், பீரங்கிகளால் விடுதலைப் புலிகள் தாக்கினர். ராணுவம்பதிலுக்குத் தாக்குதல் நடத்தியது.
ராணுவத் தரப்பில் நான்கு பேர் இறந்தனர். 3 பேர் காயமடைந்தனர். 14 வீர்ரகள் மற்றும் பொதுமக்களில் 11 பேருக்கு தோட்டாக்கள் சிதறியதில்காயம் ஏற்பட்டுள்ளது.
ராணுவம் பதிலுக்கு நடத்திய தாக்குதலில் புலிகளின் முகாம் ஒன்று பிடிபட்டது என்றார் அவர். இந்த சம்பவம் குறித்து புலிகள் தரப்பில் எந்தத்தகவலும் இல்லை.
கிழக்கிலங்கையில், சமீபத்திய சண்டைகளின் மூலம் புலிகள் வசமிருந்து 230 சதுர மைல் பரப்பளவை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும் இந்தப் பகுதிகளை முழுமையாக ராணுவம் இன்னும் நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து இப்பகுதிகளில் சண்டை நடந்துவருவதால் ராணுவத்துக்கு இது முழு வெற்றி என்று கூற முடியாது என கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications