ஆயுதக் கடத்தல்: மதிமுக பிரமுகர் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்கிக் கொடுத்தது தொடர்பான வழக்கில் மதிமுக அமைப்புச் செயலாளர் சீமா பஷீர் கைது செய்யப்பட்டார்.

Seema Basheerசமீப காலமாக இலங்கைக்கு ஆயுதக் கடத்தல் நடப்பது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கிட்டத்தட்ட தினசரி சிலர் கைது செய்யப்பட்டுவருகின்றனர். இதுவரை 50 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பரக்கத் என்பவர் கைது செய்யப்பட்டார். ஹவாலா பணப் பரிமாற்றம், ஆயுதம்வாங்க உதவியது உள்ளிட்ட புகார்களின் பேரில் பரக்கத் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சீமா பஷீர் குறித்த சில தகவல்கள் கிடைத்தன. சீமா பஷீரும் மண்ணடியைச் சேர்ந்தவர்தான். மதிமுக அமைப்புச்செயலாளராக உள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் அன்பழகனை எதிர்த்துப் போட்டியிட்டு 409 ஓட்டுக்கள்வித்தியாசத்தில் தோல்வியுற்றவர்.

சீமா பஷீரை சில நாட்களாக கியூ பிரிவு போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அவரிடம் விசாரிக்க அவரது வீட்டுக்கு போலீஸார்சென்றனர்.

ஆனால், மதிமுக வக்கீல் ராதாகிருஷ்ணனின் ஆலோசனையைக் கேட்ட பிறகே பஷீரை விசாரிக்க அனுமதிக்க முடியும் என அவரது சகோதரர்வழக்கறிஞர் முஸ்தபா தெரிவித்தார்.

இதை போலீஸார் ஏற்றனர். முஸ்தபா, சீமா பஷீர் ஆகியோருடன் ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அங்கு ராதாகிருஷ்னன் என்னவிவரம் என்று போலீஸாரிடம் கேட்டார். அதன் பின்னர் சீமாவை அழைத்துச் சென்று விசாரிக்க சம்மதித்தார்.

இதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு சீமா பஷீர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்நன்மாறன் உள்ளிட்ட பலரும் உடன் சென்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது. அதன் பின்னர் சீமா பஷீர் கைது செய்யப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர். பெரம்பலூரில் ரமேஷ்குமார் என்பவரின் சோப்புக் கம்பெனியில் பிடிபட்ட நாலரை டன் இரும்புக் குண்டுகளை வாங்குவதற்கு ரூ. 2 லட்சம் பணம் கொடுத்தவர் சீமாபஷீர்தான் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வழக்கு திருச்சியில் விசாரிக்கப்பட்டு வருவதால் சீமா பஷீரை உடனடியாக திருச்சிக்குக் கொண்டு செல்லவிருப்பதாக போலீஸார்தெரிவித்தனர்.

தான் கைது செய்யப்பட்டது குறித்து சீமா பஷீர் கூறுகையில், இது பொய் வழக்கு. என்னைப் பழிவாங்க இந்த வழக்கைப் போட்டுள்ளனர். மதிமுகபொதுச் செயலாளர் வைகோவின் அறிவுரைப்படி, விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கடத்தல் தொடர்பாக மதிமுக முக்கியப் பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியப் புள்ளி சரண்:

இதற்கிடையே, விடுதலைப் புலிகளுக்கு இரும்பு குண்டுகளை சப்ளை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய பிரமுகரான ரமேஷ் குமார் என்கிறஎன்ஜீனியர் சென்னை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

சமீபத்தில் திருச்சியில் அருள்சீலன் என்ற இலங்கைத் தமிழரை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூருக்குபோலீஸ் படை விரைந்தது.

அங்கு ரமேஷ்குமாருக்குச் சொந்தமான சோப்பு நிறுவனத்தை போலீஸார் சோதனையிட்டபோது, அங்கு மூடை, மூடையாக இரும்புக் குண்டுகள்சிக்கின. இந்த குண்டுகள் இலங்கைக்கு கடத்தப்பட பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

போலீஸ் வருவதை அறிந்ததும் ரமேஷ்குமார் தப்பி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சென்னைஎழும்பூர் 6வது பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு ரமேஷ்குமார் சரணடைந்தார்.

அவரை ஏப்ரல் 3ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் தர்மன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ரமேஷ்குமார் புழல் சிறையில்அடைக்கப்பட்டார்.

அவரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க இன்று அல்லது நாளை போலீஸார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+