புலிகளைப் புரட்டி எடுத்த சிங்கம்:பாக்கிஸ்தான் ஆறுதல் வெற்றி
போர்ட் ஆப் ஸ்பெயின்:உலககோப்பை பி பிரிவு போட்டியில் இலங்கை அணி வங்கதேச அணியை 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மற்றொரு டி பிரிவுபோட்டியில் ஜிம்பாப்வே அணியை 93 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கையும், வங்கதேசமும் நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தபோட்டியில் மோதின.இந்தியாவை வென்றதைப் போல இலங்கையையும் வெல்ல முயற்சிப்போம் என்று வங்கதேச அணி கூறியிருந்தது. இந்த நிலையில் நேற்றையபோட்டியின் முடிவை இந்தியாவும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தது.
இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஹபிபுல் பாஷர், இலங்கையை பேட் செய்யப் பணித்தார். தொடக்க ஆட்டக்காரராக இறங்கியஜெயசூர்யா, வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன்களைக் குவித்தார்.
இந்தியாவிடம் சிறப்பாக பந்து வீசிய வங்கதேச வீர்ரகள், நேற்றைய போட்டியில் சொதப்பி விட்டனர். அவர்களின் பந்துகளை ஜெயசூர்யா,சிக்சருக்கும், பவுண்டரிக்குமாக விரட்டி, வங்கதேச வீரர்களிடம் எப்படி விளையாட வேண்டும் என்று பாடம் எடுப்பது போல ஆடினார்.
அதி விரைவாக ரன்களைக் குவித்த ஜெயசூர்யா, 87 பந்துகளில் 109 ரன்களைக் குவித்தார். மறுபுறம் கேப்டன் ஜெயவர்த்தனே 46 ரன்களும்,சங்கக்காரா 56 ரன்களும், சமர சில்வா ஆட்டமிழக்காமல் 52 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 50 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 318ரன்களைக் குவித்தது இலங்கை.
பின்னர் வங்கதேசம் தனது ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மழை குறுக்கிட்டது. மொத்தம் 3 முறை மழைகாரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 46 ஓவர்களில் 311 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு வங்கதேசத்திற்குநிர்ணயிக்கப்பட்டது.
மிகப் பெரிய ஸ்கோர் என்பதால் பதட்டத்துடன் ஆடியது வங்கதேசம். இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேசவீர்ரகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சுருண்டனர்.
முகம்மது அஷ்ரபுல் மட்டும் சமாளித்து ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில், 37 ஓவர்களில் 112 ரன்களை மட்டுமே தோல்வியைத் தழுவியது வங்கதேசம்.
இந்த வெற்றியின் மூலம், இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அடுத்து நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியாவை சந்திக்கிறதுஇலங்கை. அதேபோல அடுத்த போட்டியில் பெர்முடாவை சந்திக்கிறது வங்கதேசம்.
பெர்முடாவை வங்கதேசம் எளிதில் வெல்லக் கூடிய வாய்ப்புகள் உள்ளதால், நாளைய போட்டியில் இலங்கையை இந்தியா வென்றே தீர வேண்டும்.இலங்கையை வீழ்த்தினால் மட்டுமே இந்தியாவால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி:
கிங்ஸ்டனில் நடந்த மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
டி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் ஏற்கனவே உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டது. நேற்று நடந்த கடைசி லீக்போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் அது மோதியது.
சபீனா பார்க் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டிதான் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் கடைசிப் போட்டி என்பதால் இப்போட்டியைசிறந்த முறையில் வெல்ல பாகிஸ்தான் வீரர்கள் உறுதி பூண்டனர்.
அதன்படி ஜிம்பாப்வே பந்து வீச்சை அடித்து நொறுக்கி ரன்களைக் குவித்தது பாகிஸ்தான். தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் நஸீர் அபாரமாக ஆடி160 ரன்களைக் குவித்தார். உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
இன்சமாம் உல் ஹக் 35 பந்துகளை சந்தித்து 37 ரன்களை எடுத்தார். ஆட்டமிழந்த போது பேட்டை உயர்த்தி ரசிகர்களுக்கு பிரியா விடைகொடுத்தபடி கண்களில் நீர் மல்க மைதானத்தை விட்டு வெளியேறினார் இன்சமாம்.
49.5 ஓவர்களில் ஆட்டமிழந்த பாகிஸ்தான் 349 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடியது ஜிம்பாப்வே. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழைகுறிக்கிட்ட ஆட்டம் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் முறைப்படி 20 ஒவருக்கு 190 ரன் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன்ஜிம்பாப்வே அணி ஆட்டத்தை தொடங்கியது.
ஆனால் பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 19.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழுந்து 93 ரன்வித்தியாசத்தில் தேல்வி அடைந்தது.
ஆட்டநாயகனாக இம்ரான் நஸீர் தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications