10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது.
பிளஸ்டூ தேர்வு சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று முதல் பத்தாவது வகுப்புத் தேர்வுகள் தொடங்கியுள்ளன.
முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வுஎழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 2634 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 5ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications