எஸ்.சி. மாணவிகளுக்கு ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி
சென்னை:ஆதிதிராவிட மாணவிகள் 100 பேருக்கு விமான பணிப்பெண் பயிற்சிக்கான உதவித் தொகையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை அமைச்சர் தமிழரசி வழங்கினார்.
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு விமான பணிப்பெண் பயிற்சியளிக்கும்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதி திராவிடப் பெண்கள் 100 பேருக்கு உதவித் தொகையை அமைச்சர் தமிழரசி வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழரசிபேசுகையில், விமான பணிப்பெண் பயிற்சிக்கான ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவிக்கும் ரூ. 1 லட்சம் வீதம் 100பேருக்கு ரூ. 1 கோடியை தாட்கோ வழங்குகிறது. மாதாமாதம் ரூ. 200 உதவித் தொகையும் வழங்கப்படும்.
ஆதி திராவிடர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லக்கூடாது என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஆதிதிராவிட மாணவிகளான நீங்கள்தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை தள்ளி வைத்துவிட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு செயல்படுங்கள் என்றார்.
தாட்கோ நிர்வாக இயக்குனர் சிவ.சூரியன் பேசுகையில், தமிழகத்தில் 1 கோடியே 14 லட்சம் ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்கள். இதில் 18 முதல் 24வயதுள்ள பெண்கள் 16 லட்சம் பேர்.
இதில் பயிற்சிக்காக பிளஸ் 2 அல்லது பட்டபடிப்பு முடித்த 17 முதல் 24 வயது வரையிலான மாணவிகள் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிப்பெண்பயிற்சி பெறும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு சென்னை அமைந்தகரையிலுள்ள ஏர் ஹோஸ்டஸ் அகாடமி மூலம் 1 வருடம் பயிற்சியளிக்கப்படும். இதில் ஆங்கிலம், இந்தி மற்றும்கணினி பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications