இன்று இலங்கையுடன் இந்தியா மோதல்!
டிரினிடாட்:இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே இன்று மிக முக்கியமான போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால்தான் சூப்பர் 8சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்பதால் இன்றையை போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ளது.
வங்கேதசத்துடன் நடந்த போட்டியில் தேவையில்லாமல் தோல்வியுற்றதால் இந்திய அணி பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. பெர்முடாபோட்டியை மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ரன் ரேட்டை ஏற்றிக் கொண்டது.
இதைத் தொடர்ந்து இன்று இலங்கையை சந்திக்கிறது. இப்போட்டியில் இந்தியா வென்றே தீர வேண்டும். இல்லாவிட்டால் பெர்முடாவை வெல்லும்வாய்ப்பைக் கொண்டுள்ள வங்கதேசம், சூப்பர் எட்டுக்குள் நுழைந்து விடும்.
இன்றைய போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கேப்டன் ராகுல் டிராவிட் நம்பிக்கைதெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இக்கட்டான நிலையில் இன்றைய ஆட்டத்தில் இலங்கையை நாங்கள் சந்திக்கிறோம்.எப்படியும் இலங்கையை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்.
முழு பலத்தோடு மோதி இலங்கையை வெற்றி கொள்வோம். அதற்காக தயார் நிலையில் உள்ளோம். அணியில் உள்ள வீரர்கள் அனைவருமேதாங்களது திறமையை வெளிபடுத்த தயாராக இருக்கிறார்கள் என்றார் அவர்.
மறுபக்கம், இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று, முழு தெம்போடு சூப்பர் எட்டு சுற்றுக்குச் செல்ல இலங்கை அணியும் முழு மூச்சாக இருக்கிறது.
இன்று நடைபெறும் இன்னொரு போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், அயர்லாந்தும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் ஏற்கனவேசூப்பர் எட்டு சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டன என்பது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications