வெற்றி கொண்டான் பேச்சு-பாமக கொதிப்புமுதல்வர் அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் தர்ணா
சென்னை:திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை மோசடித் தலைவர் என்று கூறியதால் பாமகவினர்கொதிப்படைந்துள்ளனர். சட்டசபையில் இன்று முதல்வர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் முதல்வரை முற்றுகையிட்டு வெற்றிகொண்டான் குறித்து குமுறல் வெளியிட்டனர்.
திமுக பேச்சாளரான வெற்றி கொண்டான் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், டாக்டர் ராமதாஸ் ஒரு மோசடித் தலைவர் என்றுகடுமையாக கூறியிருந்தார். இதனால் பாமகவினர் கொதிப்படைந்துள்ளனர்.
நேற்று இரவு வட மாவட்டங்களின் பல பகுதிகளில் வெற்றிகொண்டானை கடுமையாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சில இடங்களில்வெற்றி கொண்டான் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று சட்டசபையில் பட்ஜெட் உரை வாசித்து முடிந்ததும், அலுவல் ஆய்வுக் குழு கூடியது. ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் பாமக புறக்கணித்தது.
கூட்டத்தைப் புறக்கணித்த பாமக எம்.எல்.ஏக்கள் நேராக முதல்வர் கருணாநிதியின் அறைக்குச் சென்றனர். முதல்வரை சந்திக்க விரும்புவதாகஅங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அவர்களை உள்ளே அனுமதிக்க அதிகாரிகள் தாமதம் செய்ததால் ஆத்திரமடைந்த பாமக எம்.எல்.ஏக்கள் முதல்வர் அறை முன் அப்படியே தரையில்அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கருணாநிதியை சந்திக்க பாமகவினருக்கு அனுமதி தரப்பட்டது. உள்ளே சென்று முதல்வர் கருணாநிதியை வெற்றி கொண்டான் பேச்சு குறித்துமுதல்வரிடம் பாமக எம்.எல்.ஏக்கள் விளக்கம் கேட்டனர். வெற்றி கொண்டானின் அநாகரீகமான பேச்சுக்குக் கண்டனமும் தெரிவித்தனர்.
அவர்களை கருணாநிதி சமாதானப்படுத்த மயன்றார். ஆனால், பாமகவினர் சமாதானமாவது போல தெரியவில்லை. நீண்ட நேரம் முதல்வரைமுற்றுகையிட்டபடி வெற்றிகொண்டான் குறித்து ஆவேசமாகப் பேசினர் பாமக எம்.எல்.ஏக்கள்.
பின்னர் ஒரு வழியாக அவர்களை சமாதானப்படுத்திய முதல்வர், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தார்.அதன் பின்னர் பாமக பிரதிநிதிகள் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதல்வரைச் சந்தித்து விட்டு வெளியில் வந்த பாமக தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், வெற்றிக் கொண்டான் எங்கள் கட்சிநிறுவனர் பற்றி கேவலமாக, அவதூறாக பேட்டி அளித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.
பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் எங்கள் மனவருத்தத்தை தெரிவிப்பதற்காக முதல்வரை சந்தித்து பேசினோம். வெற்றிக் கொண்டான் இப்படி பேசியதுதிமுக தலைமை பச்சைக் கொடி காட்டியதால் வெளி வந்ததோ என்ற எங்கள் சந்தேகத்தை நேரடியாகவே முதல்வரிடம் தெரிவித்தோம்.
நாங்கள் இதுவரை திமுக பற்றியோ, முதலமைச்சர் பற்றியோ எந்த கருத்தையும் வெளியிடாத நிலையில் எங்கள் தலைவரை பற்றி நேரடியாகதரக்குறைவாக விமர்சித்தது எந்த வகையில் நியாயம் என்று கேட்டோம்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி குறை பற்றித்தான் தெரிவித் தார்கள். ஆனால் திமுக தலைமை பற்றியோ,முதலமைச்சர் பற்றியோ எதுவும் பேசவில்லை. ஆனால் வெற்றிக்கொண்டான் எங்கள் தலைவரை பற்றி நாராச நடையில் விமர்சித்திருக்கிறார் என்றுகூறினோம்.
எங்கள் கருத்தை பொறுமையாக கேட்ட முதலமைச்சர், தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார். திமுகவோ, நானோ இது போன்றசெயலை ஊக்கமளிக்கவில்லை. நானும் இதை பார்த்து வேதனைபடுகிறேன்; உடனடியாக அவரைக் கண்டிக்கிறேன். மன்னிப்பு கேட்க சொல்கிறேன்என்றார்.
முதல்வரின் பதில் திருப்தி தந்ததால் அத்தோடு வந்து விட்டோம். வெற்றி கொண்டான் பேசியது வேதனைக்குரியது என்றும், அவரை மன்னிப்புகேட்க செய்வேன் என்றும் முதல்வர் கூறியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.
முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற உறுதியை தொடர்ந்து இப்பிரச்சனையை இத்தோடு விட்டு விடுகிறோம் என்றார் மணி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications