ஸ்டிரைக்கில் குதிக்கும் தபால் ஊழியர்கள்
வேலூர்: ஆட்குறைப்பு, தபால் துறையில் தனியாரை ஈடுபடுத்தும் மத்திய அரசின் முடிவு உள்ளிட்டவற்றை எதிர்த்து ஏப்ரல் 24ம் தேதி முதல் தபால் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
வேலூரில் தேசிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் சென்னை மண்டல சிறப்பு மாநாடு நடந்தது.
கூட்டத்தில் அகில இந்திய செயல் தலைவர் ராகவேந்திரன், தமிழ் மாநில செயலாளர் பார்த்திபன் ஆகிேயார் பேசுகையில், மத்திய அரசு தபால் துறையில் சீரமைப்பு என்ற பெயரில் பல பாகமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் அஞ்சலகங்களை மூடுவது, ஆட்குறைப்பு செய்வது, ஆர்.எம்.எஸ் பிரிவை மூடுவது, தபால் பெட்டிகளை குறைப்பது, தபால் பட்டுவாடாவைக் குறைப்பது போன்றவற்றில் அரசு ஈடுபட்டு வருவதால் பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டிய தபால் துறையின் சேவை வெகுவாக பாதிக்கும்.
தபால் துறையை சேவையாக பார்க்காமல் வியாபாரமாக அரசு கருதுகிறது.
இப்போது சோதனை முறையில் தனியார் அஞ்சல் அலுவலகங்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் 100 அலுவலகங்களையும், 10 அலுவலகங்களை தமிழகத்தில் திறக்கவும் முடிவு ெசய்து முதலில் சென்னையில் திறந்துவிட்டனர்.
இந்த நிலை வருங்காலத்தில் மிக மோசமான நிலையை உருவாக்கிவிடும்.
இந்த பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி அடுத்த மாதம் 24ம் தேதி முதல் அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications