3க்காக 2 ஐக் கொன்ற சாமி கைது!
சென்னை:3வது கல்யாணம் செய்து கொள்வதற்காக, கர்ப்பமாக இருந்த தனது 2வது மனைவியைக் கொலை செய்த கோவில் புரோகிதரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். புரோகிதராக கோவில்களில் வேலை பார்த்து வருகிறார். இதுதவிர கல்யாணம், காரியம் உள்ளிட்டவற்றுக்கும் போய் வருவது வழக்கம்.
இவருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டார். 2வதாக கஸ்தூரி என்ற பெண்ணை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் செய்தார். அவர் பிராணமர் அல்ல. இது காதல் கல்யாணம்.
இந்த நிலையில் கடந்த 22ம் தேதி கஸ்தூரி தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார். தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஹரிஹரன் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார்.
ஆனால் போலீஸ் விசாரணையில் கஸ்தூரி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஹரிஹரன், அவரது தாயார் ரேணுகா தேவி ஆகியோரை போலீஸார் தீவிரமாக விசாரித்தனர்.
இதில், ஹரிஹரன்தான் கஸ்தூரியைக் கொன்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
ஹரிஹரனுக்கு செக்ஸ் ஆசை அதிகமாம். கஸ்தூரியை மணந்த பின்னர் சில காலம் சந்ேதாஷமாக இருந்துள்ளார். ஆனால் அவருக்கு கஸ்தூரி அலுத்து விட்டார். இதனால் 3வதாக ஒரு கல்யாணம் செய்யத் திட்டமிட்டார்.
இந்த நிலையில் கஸ்தூரி கர்ப்பமானார். 3வது கல்யாண ஆசையில் இருந்த ஹரிஹரனுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. கருவைக் கலைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் கஸ்தூரி மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன், 3வது கல்யாணத்துக்கு இடையூறாக இருக்கிறாரே என்ற கோபத்தில் கஸ்தூரியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். சரமாரியாகவும் அடித்துள்ளார். இதில் கஸ்தூரி மயங்கி விழுந்தார்.
பின்னர் அவரை ஒரு சேரில் உட்கார வைத்து கழுத்தில் கயிற்றைக் கட்டி, சேரை இழுத்து விட்டுக் கொலை செய்தார். பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார்.
ஹரிஹரனைக் கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications