கருணாநிதிக்கு அகந்தை-கர்நாடக பாஜக து.மு!
பெங்களூரு:காவிரி பிரச்சனையில் பேச்சு வார்த்தைக்கு இடமில்ல என முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டிருப்பது அவரது அகந்தையைக் காட்டுகிறது என கர்நாடக துணை முதல்வர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனை குறித்து பேச்சு வார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஒப்புக் கொண்டார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் தான் அப்படிச் சொல்லவில்லை, உகாதி வாழ்த்துதான் குமாரசாமிக்குக் கூறியிருந்தேன். காவிரி தொடர்பாக பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று கருணாநிதி விளக்கியிருந்தார்.
இதுகுறித்து கர்நாடக சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் தரம் சிங் மற்றும் சில உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர். குமாரசாமி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரினர்.
அதற்கு துணை முதல்வர் எடியூரப்பா பதிலளித்தார். அவர் கூறுகையில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனையை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி அகந்தையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது கன்னடர்கள் மற்றும் தமிழர்களுக்கு இடையே நிலவும் நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக உள்ளது. பேச்சு வார்த்தைக்கு கருணாநிதி தயாராக இல்லை என்றால் நாங்கள் அதை எதிர்க்க போவது இல்லை.
இதற்காக எங்கள் முதல்வர் குமாரசாமியை சாதாரணமாக கருதக் கூடாது என்றார் எடியூரப்பா.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications